Tuesday 19 January 2016

தேசிய அரிசி ஆராய்ச்சி மையத்தில் டெக்னிக்கல் உதவியாளர் பணி

ஒடிசாவில் செயல்பட்டு வரும் National Rice Research Institute-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 03/2015
பணி: Technician (T-1)
காலியிடங்கள்: 42
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி
பணி: Technical Assistant (T-3) (Farm Assistant)
காலியிடங்கள்: 22
தகுதி: அக்ரிகல்சர் சம்மந்தமான அறிவியல், சமூக அறிவியல் பிரிவுகளில் பட்டம் பெற்றி்ருக்க வேண்டும்.
பணி: Technical Assistant (T-3) (Computer)
காலியிடங்கள்: 01
தகுதி: அக்ரிகல்சர் சம்மந்தமான அறிவியல், சமூக அறிவியல் பிரிவுகளில் பட்டம் பெற்றி்ருக்க வேண்டும்.
பணி: Technical Assistant (T-3) (Civil)
காலியிடங்கள்: 01
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் அல்லது 3 வருட பட்டயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Technical Assistant (T-3) Engineer (Instruments)
காலியிடங்கள்: 01
தகுதி: மெக்கானிக்கல், இன்ஸ்ட்ரூமெண்டேசன், எலக்ட்ரானிக்ஸ் பிரிவுகளில் பட்டம் அல்லது 3 வருட பட்டயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Technical Assistant (T-3) Engineer (Mechanical)
காலியிடங்கள்: 01
தகுதி: மெக்கானிக்கல் பிரிவில் பட்டம் அல்லது 3 வருட பட்டயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Technical Assistant (T-3) Engineer (Electrical)
காலியிடங்கள்: 01
தகுதி: எலக்ட்ரிக்கல் பிரிவில் பட்டம் அல்லது 3 வருட பட்டயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை ICAR Unit:CRRI என்ற பெயரில் Cuttack-ல் மாற்றத்தக்க வகையில் குறுக்கு கோடிட்ட வங்கி வரைவோலையாக எடுக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை: http://www.crri.nic.in என்ற இணையதளத்தி்ல் கொடுக்கப்பட்டுள்ளவிண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் அட்டெஸ்ட் பெற்று டி.டி இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகதவரி:
The Senior Administrative Officer, National Rice Research Institute, Cuttack - 753006 (Odisha)
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 01.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.crri.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment