Friday 8 January 2016

சணல் ஆராய்ச்சி மையத்தில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணி

கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் சணல் ஆராய்ச்சி நிலையத்தில் (Central Research Institute for Jute & Allied Fibres) காலியாக உள்ள டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். Rec/1/2015
மொத்த காலியிடங்கள்: 20
பணி - காலியிடங்கள் விவரம்:
1.  Technical Assistant (T-3) (Laboratory Technician) - 04
2. Technical Assistant (T-3) (Field, Farm Technician) - 01
3. Technical Assistant (T-3) (Library Assistant) - 01
4. Technical Assistant (T-3) (Farm Engineer) - 01
5. Technical Assistant (T-1) (Field, Farm Technician) - 08
6. Lower Division Clerk - 05
தகுதி: Agriculture அல்லது Agriculture சம்மந்தமான Science, Social Science பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை "ICAR-UNITCRIJAF" என்ற பெயரில் கொல்கத்தாவில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.crijaf.org.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் அட்டெஸ்ட் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தட்டச்சு திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டி அஞ்சல் முகவரி:  The Director, ICAR-Central Research Institute for Jute & Allied Fibres, Barrackpore, Kolkata - 700 120, West Bengal.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:23.01.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.crijaf.org.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment