Friday 5 April 2013

1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்! 2013




அதிக செலவு பிடிக்கும் காரியங்களைக் குறிப்பிட-யானையைக் கட்டித் தீனி போட்டது போல என்பார்கள். அவற்றில் ஒன்றுதான், கார் வாங்குவது என புலம்புபவர்களும் இன்று உண்டு. பெட்ரோல் விலை உயரத் தொடங்கிய பிறகு பலருக்கு இந்த சோக நிலை.
ஆனால், எதிர்காலத்தில் இதில் மாற்றம் வரும் போலிருக்கிறது. ஒரே ஒரு லிட்டர் பெட்ரோலில், ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் செல்லக் கூடிய காரை துபாயைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் உருவாக்கி வருகிறார்கள்.
Eco-Dubai 1 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த எடை குறைவான கார் தயாரிப்பில், மாணவர்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளனர். அடுத்த 2 வாரங்களில் அதன் சோதனை ஓட்டம் தொடங்கி விடும் என்று துபாய் தொழில்நுட்ப கல்லூரியை சேர்ந்த ஆராய்ச்சிக் குழு மாணவர் அஹமத் காமிஸ் தெரிவித்தார்.
பெட்ரோல், டீசல் இன்னும் நீண்ட காலத்துக்கு கிடைக்கப் போவதில்லை. எனவே, அவற்றைச் சிக்கனம் செய்யும் தொழில்நுட்பங்கள் அவசரத் தேவை என்கிறார் அவர்.
அதனால், இந்தக் கார்தான் ஐக்கிய அரபு குடியரசின் எதிர்காலம் என்றும் அஹமத் கூறினார். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ஜூலை மாதம் நடைபெறும் கண்காட்சியில் இந்தக் கார் இடம்பெறும் எனத் தெரிகிறது.
இந்தக் கார் வெளிவந்து, குறைந்த விலைக்கும் கிடைத்தால், பெட்ரோலுக்காக நாடுகள் இடையே நடக்கும் போரைத் தவிர்ப்பதுடன், பெட்ரோலை பக்கத்து வீட்டுக்கு காருடன் பகிர்ந்து கொள்ளவும் வழி ஏற்படலாம்.

No comments:

Post a Comment