Friday 12 April 2013

Jawaharlal Institute of Post graduate Medical Education and Research-ல் மருத்துவம் சார்ந்த பல்வேறு பணிகள் April 2013 Updates


புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் எனப்படும் Jawaharlal Institute of Post graduate Medical Education and Research எனும் நிறுவன மருத்துவமனையில் மருத்துவம் சார்ந்த பல்வேறு காலிப் பணியிடங்கள் உள்ளன.
Psychiatric Nurse, Junior Occupational Therapist, Junior Physiotherapist, X-ray Technician, Family Welfare Extension Educator, Technical Assistant, Electronic Assistant மற்றும் Psychiatric Social Worker cum Tutor உள்ளிட்ட மருத்துவ சிகிச்சை சார்ந்த பணியிடங்கள் உள்ளன. இவற்றைத் தவிர, Orthopatist அல்லது Refractionist, Pharmacist, Medical Records Technician, Sanitary Inspector, Orthodontic Technician, Physiotherapy Technician, Physiotherapy Assistant, Theatre Assistant உள்ளிட்ட மருத்துவ துணைப் பணியிடங்களும் உள்ளன.
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணலில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில், தேர்ச்சி முடிவு செய்யப்படும். காலிப் பணியிடங்கள் குறித்த கூடுதல் விவரங்களை www.jipmer.edu என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இந்த பணிகளில் சேர்வதற்கான அடிப்படை தகுதிகள்:

புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மருத்துவ உதவி தொடர்பான பல்வேறு காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்த பணிகளில் சேர்வதற்கான அடிப்படை தகுதிகள் குறித்து இப்போது பார்க்கலாம்.

மருத்துவ முதன்மைப் பணிகளுக்கு, விண்ணப்பிப்பவர்கள் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். மருத்துவ உதவி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் தேர்வு செய்யும் பணிக்கு ஏற்ப அதிகபட்ச வயது 27 முதல் 30க்குள் இருக்க வேண்டும். Psychiatric nurse பணிக்கு நர்சிங் அல்லது அதற்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும்.
அரசுப் பதிவு பெற்ற செவிலியராகவும், Psychiatric நர்சிங் பட்டயப் படிப்பை முடித்திருக்க வேண்டியதும் அவசியம். 3 ஆண்டு கால பணி முன் அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். Staff Nurse பணிக்கு, நர்சிங் அல்லது அதற்கு நிகரான படிப்பை முடித்து பதிவு செய்திருக்க வேண்டும். Junior Physiotherapist பணிக்கு, Physiotherapy பட்டப் படிப்பை முடித்து, இரண்டு ஆண்டுகள் அந்தத் துறையில் பணிபுரிந்த அனுபவமும் அவசியம்.
X-Ray Techinician பணிக்கு, Medical Radiation Technology பட்டப்படிப்பு அல்லது அதற்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும். 2 ஆண்டுகள் முன் அனுபவத்துடன் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். Junior physiotherapy பட்டயப் படிப்பு முடித்து 3 ஆண்டு கால முன் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பிற பணிகளுக்கான தகுதிகள் மற்றும் கூடுதல் விவரங்களை www.jipmer.edu என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மருத்துவ உதவி தொடர்பான பல்வேறு காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள் குறித்து இப்போது பார்க்கலாம்.
மருத்துவம் சார்ந்த முதன்மைப் பணிகளுக்கு விண்ணப்பக் கட்டணமாக 500 ரூபாய் செலுத்த வேண்டும். மருத்துவ உதவிப் பணிகளுக்கு விண்ணப்பக் கட்டணமாக 300 ரூபாய் செலுத்தவும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் விண்ணப்பக் கட்டணத்தில் 50 சதவீதம் செலுத்தினால் போதுமானது. மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பக் கட்டணமில்லை.
விண்ணப்பக் கட்டணத்தை, Accounts Officer, JIPMER, Puducherry என்ற பெயரில் வரைவோலையாக எடுத்து விண்ணப்பிக்கவும். ஒன்றுக்கு மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் தனித்தனியாக வரைவோலை எடுத்து விண்ணப்பிக்க வேண்டும்.
அரசுப் பணியாளராக இருப்பின் பணிபுரியும் பிரிவில் தடையில்லாச் சான்றிதழ் பெற்று வர வேண்டும். விண்ணப்பத்துடன் அண்மையில் எடுத்த பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை இணைத்து அனுப்பவும். விண்ணப்ப உறையில் விண்ணப்பிக்கும் பிரிவு, அதற்கான Code No. ஆகியவற்றை குறிப்பிட்டு அனுப்பவும்.
விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி:
Director, JIPMER, Puducherry - 605 006.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப ஏப்ரல் 29-ஆம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment