Wednesday 3 April 2013

“செவ்வாய்க் கிரகத்திற்கு பயணம் செல்வதே எனது லட்சியம்” – சுனிதா வில்லியம்ஸ் 2013




செவ்வாய்க் கிரகத்திற்கு பயணம் செல்வதே தனது லட்சியம் என்று இந்தியா வந்துள்ள விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள தேசிய அறிவியல் மையத்திற்கு வருகை புரி்ந்த சுனிதா வில்லியம்ஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது நிலவில் விண்வெளி ஆராய்ச்சி மையம் அமைப்பது பற்றி நாசா (NASA) ஆலோசித்து வருவதாக அவர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து மும்பை செல்லும் சுனிதா வில்லியம்ஸ், சமூக நலனுக்கான தேசிய ஆணையம் சார்பில் அங்கு நடத்தப்பட்டு வரும் பணிக்குச் செல்லும் மகளிர் விடுதியில் தங்கியுள்ள பெண்களுடன் கலந்துரையாடுகிறார்.

மேலும், வொர்லியில் உள்ள நேரு தேசிய மையத்தில் பயிலும் மாணவர்களோடும் அவர் உரையாடுகிறார். இதையடுத்து குஜராத் செல்லும் சுனிதா வில்லியம்ஸ் மெசானா மாவட்டத்தில் உள்ள அவரது உறவினர்களைச் சந்தித்து பேசவிருப்பதாக கூறப்படுகிறது.
"செவ்வாய் கிரகத்துக்கு செல்ல வேண்டும்":
"செவ்வாய்க்குச் செல்வது மிகவும் சுவாரஸ்யமான ஒன்று. அதற்கு தகுந்த விண்கலத்தை உருவாக்க வேண்டும். செவ்வாய்க்குச் செல்வது தான் என் லட்சியம். மேலும், நுண்கோள்கள் பற்றிய ஆராய்ச்சியைச் செய்வதும் மிக முக்கியம். அது நம் பூமிக்குப் பயனுள்ளதாக இருக்கும்." என சுனிதா வில்லியம்ஸ் கூறினார்.

No comments:

Post a Comment