Friday 12 April 2013

ஹாக்கத்தான் போட்டிகள் இன்று இந்தியா முழுவதும் துவக்கம் 2013 / 04 / 12 Updates


மத்திய அரசின் திட்டக்குழு மற்றும் தேசிய புதுமைக் குழுமம் இணைந்து நடத்திய ஹாக்கத்தான் (Hackathon) போட்டிகள் இன்று இந்தியா முழுவதும் தொடங்கி வைக்கப்பட்டன.
12-ஆவது ஐந்தாண்டு திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் ஹாக்கத்தான் (Hackathon) போட்டியில் ஆயிரக்கணக்கான இளம் படைப்பளிகள், இயக்குநர்கள், கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்தியாவில் இந்த போட்டி ஐ.ஐ.டி. மெட்ராஸ், ஐ.ஐ.டி. டெல்லி, டெல்லி பல்கலைக்கழகம் உட்பட 11 இடங்களில் நடத்தப்படுகின்றன.

32 மணி நேரம் நடத்தப்படும் இந்தப் போட்டியில் கைபேசிகளுக்கான மென்பொருள், தகவல் வரைபடம் மற்றும் குறும்படம் என மூன்று பிரிவுகள் உள்ளன. 12-ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில் உள்ள அம்சங்களை மாணவர்கள் தெரிந்துகொண்டு அவர்களுக்கு விருப்பமான பிரிவை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
அந்தப் பிரிவைப் பற்றிய மாணவர்களின் கருத்தை இந்த மூன்று வடிவங்களில் ஏதாவது ஒரு வகையில் சம்ர்ப்பிக்கலாம். சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. இதுபோன்ற போட்டிகள் மூலம் ஐந்தாண்டு திட்டங்களின் அம்சங்களை பொது மக்களிடம் எடுத்துச் செல்ல முடியும் என்கின்றனர் திட்டக்குழுவைச் சேர்ந்த அலுவலர்கள்.

No comments:

Post a Comment