Thursday 8 August 2013

டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: தாள்-I, II க்கான அறிவியல் வினா - விடைகள்

*ஒரு உயிரினத்திலிருந்து மற்றொரு உயிரினத்திற்கு உணவாற்றல் மாற்றப்படுவது - உணவுச்சங்கிலி மூலம்
* நீர்ப்பரப்பின் மீது மிதந்து வாழ்கின்ற தாவரத்திற்கு உதாரணம் - ஜக்கார்னியா
* மண்ணில் வேரூன்றி நீரில் மூழ்கியுள்ள தாவரத்திற்கு உதாரணம் - வாஸ்நேரியா
* நீரில் வேரூன்றி மிதக்கும் தாவரத்திற்கு உதாரணம் - நிம்ஃபியா
* நீர் நில வாழ்வன தாவரங்களுக்கு உதாரணம் - லிம்னோபில்லா, ஹெட்டிரோபில்லா
* தாவரத்தின் பகுதிகள் தசைப்பற்றுடையதாகவும், இலைகளின் எண்ணிக்கை குறைவாக உள்ள தாவரங்கள் எந்த சூழ்நிலையில் உயிர் வாழும் - வறள் நிலத்தாவரங்கள்
* எலியின் மூலம் பரவும் நோய்களில் மிகவும் முக்கியமானது - பிளேக்
* சுற்றுப்புறத் தூய்மையை பாதுகாக்கும் உயிரிகள் கழிவு நீக்கிகள் எனப்படுகின்றன.
* கழிவு நீரில் மாசு காட்டிகளாக வளர்வது - குளோரெல்லா, ஆகாயத் தாமரை

* உடல் நல வாழிடங்கள் எனப்படுவது - மலைப்பிரதேசங்கள்
* புல்வெளிப் பிரதேசங்களில் வாழும் விலங்குகளுக்கு உதாரணம் -  காட்டெருமை, கலைமான்கள், வரிக்குதிரை, குருவி, கங்காரு
* விலங்கு மிதவை உயிரிகளுக்கு உதாரணம் - கோபிபாடு, ரோடிபர், ஆஸ்ட்ரோகோடுகள்
* வறள் நிலத்தாவரங்களுக்கு உதாரணம் - சப்பாத்தி, சவுக்கு, திருக்கள்ளி
* மறுசுழற்சி செய்யும் விலங்கினம் - மண்புழு
* இலைகள் முட்களாக மாறியுள்ள தாவரத்திற்கு உதாரணம் - சப்பாத்திக்கள்ளி
* இடைநிலத் தாவரத்திற்கு உதாரணம் - பலா
* மூன்றாம் நிலை நுகர்வோருக்கு உதாரணம் - கழுகு
* இரண்டாம் நிலை நுகர்வோருக்கு உதாரணம் - பாம்பு
* வரிக்குதிரை காணப்படும் நில வாழிட சூழ்நிலை - புல்வெளிப்பிரதேசம்
* பென்குயின்கள் காணப்படும் வாழிடம் - தூந்திரப்பிரதேசம்
* எலி ஒருமுறை போடும் குட்டிகளின் எண்ணிக்கை - 10-15
* மழைநீருக்கு ஆதாரம் - காடுகள்
* சூழ்நிலை பாதிப்படைவதற்கு முக்கியக் காரணம் - மக்கள்தொகை
* மண்ணுக்கும் மண்புழுவுக்கும் உள்ள தொடர்பைக் கண்டறிந்தவர் - சார்லஸ் டார்வின்
* கழிவு நீரில் வாழும் கைராமமஸ் இளம் உயிரி சிதைப்பவைகளில் ஒன்றாகும்.
* பிளேக் நோய்க்கான கடத்தியாக செயல்படுவது - சீனோப்சில்லா
* பிளேக் நோய்க்கு காரணமான பாக்டீரியா - எர்சினியாபெஸ்டிஸ்
* இரப்பர் தாவரத்தின் தாவரவியல் பெயர் - இவியா பிரேசியன்சிஸ்
* இரப்பர் தாவரத்தைக் கண்டுபிடித்தவர் - கிறிஸ்டோபர் கொலம்பஸ்
* இரப்பர் தாவரரத்திலிருந்து கிடைக்கும் பொருளுக்கும் இர்ப்பர் பெயரிட்டவர் - ஜோசப் பிரிஸ்ட்லி
* இரப்பர் தாவரத்தின் தாயகம் - தென் அமெரிக்காவில் உள்ள அமேசான் பள்ளத்தாக்கு
* தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் அதிக நிலப்பரப்பில் இர்ப்பர் சாகுபடி நடைபெறுகிறது - கன்னியாகுமரி
* இரப்பர் மரத்திலிருந்து கிடைக்கும் பால் போன்ற திரவத்தின் பெயர் - லேடக்ஸ்
* இட்லி பூவின் தாவரவியல் பெயர் - இக்சோரா
* மகரந்தத் தூள் சூலக முடியை அடைவதன் பெயர் - மகரந்தச் சேர்க்கை
* ஒரு மலரின் மகரந்தத் தூள் அதே மலரின் சூலகத்தை சென்றடைவதன் பெயர் - தன் மகரந்தச் சேர்க்கை
* ஒரு மலரின் மகரந்தத் தூள் வேறு மலரின் சூலகத்தைச் சென்றடைவதன் பெயர் - அயல் மகரந்தச் சேர்க்கை
* யூக்கா எனப்படும் தாவரத்தில் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவது எதன் மூலம் - பூச்சிகளின் மூலம்
* காற்றினால் பரவும் விதைகளுக்கு உதாரணம் - முருங்கை, பருத்தி, எருக்கு
* நீரினால் பரவும் விதைகளுக்கு உதாரணம் - தேங்காய்
* விலங்குகளினால் விதைகள் பரவுவதற்கு உதாரணம் - நாயுருவி
* விலங்குகளின் கழிவின் மூலம் விதை பரவுதலுக்கு உதாரணம் -  கருவேல்
* ஆமணுக்கு, அவரை, எருக்கு, பருத்தி ஆகியவற்றின் விதை வெடித்துப்பரவுதல் மூலம் பரவுகிறது.
* அதிகம் பால் தரும் பசுக்களுக்கு உதாரணம் - நியோனி, கர்சிவப்பு மற்றும் சாகிவால்
* பால் தரும் கல்ப்பின் மசுக்களுக்கு உதாரணம் - ஜெரிசி, பிரெளன் சுவில்

TAGS : tet question paper 2014, central tet question paper, kalvisolai tet question paper, kalvisolai, dinamalar tet question paper, dinakaran tet question paper, ssc tet question paper, tet question bank free download, teacher eligibility test question paper with answers, tet question paper 2014 tet question paper download, tet question paper with answer, 

No comments:

Post a Comment