Wednesday 14 August 2013

Trichy kallanai dam Construction Technology - கல்லணையின் அறிவியல் தொழில்நுட்பம்

Trichy kallanai dam Construction Technolog
ஆடி மாதங்களில், கல்லணை முக்கியத்துவம் பெறும். கல்லணையால், 4 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. கல்லணையில் பயன் படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை மேற்கத்திய விஞ்ஞானிகளும் கண்டு, இன்று வரை வியக்கின்றனர். நாம் ஓடும் நீரில் பாதங்களை வைத்தால், கீழே குறுகுறுவென மண் அரிப்பு ஏற்படும். நம் கால்களும் பூமியில் புதையும். இந்த நிகழ்வே கல்லணை கட்டுவதற்கு அடித்தளமாக அமைந்தது. காவிரி ஆற்றின் மீது பெரிய பெரிய கற்களைப் போட்டார்கள். அந்தப் பாறைகள் நீர் அரிப்பின் காரணமாக உள்ளே போயின. இவ்வாறு உள்ளே போன பாறைகள் மீது, மற்றொரு பாறையை வைத்தனர். இரு பாறைகளுக்கும் நடுவே தண்ணீரில்
கரையாத ஒருவித ஒட்டும் களிமண்ணை பூசினர். கல்லணை முழுவதுமே இந்த தொழில்நுட்பமே பயன்படுத்தப்பட்டது எனில், கட்டுமானப் பணிகள் எவ்வளவு விரைவாக நடைபெற்றிருக்க வேண்டும். அதனால் தான் பல அணைகள் கட்டிய சர் ஆர்தர் காட்டன், கல்லணையை, "தி கிரேட் அணைக்கட்' என ஆங்கிலமும், தமிழும் கலந்து கூறினார்.

1 comment: