Tuesday 20 August 2013

sekkizhar History - சேக்கிழாரும் அவர் காலமும்

sekkizhar
இவருட் பெரியபுராணம் பாடியவர் யாவர்?

மேற்காட்டிய பட்டியலில் குன்றத்தூர்ச் சேக்கிழார் மரபினர் இரண்டாம் குலோத்துங்கன் கால முதற்றான் சோழர் அரசியலில் சிறப்புப் பெறலாயினர் என்பது தெளிவாகத் தெரிகிறது. இரண்டாம் இராசாதிராசனது 19ஆம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டிற் காணப்பெறும் சேக்கிழார் பாலறாவாயரும் மூன்றாம் குலோத்துங்கனது 2ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டிற் காணப்படும் சேக்கிழார் பாலறாவாயரும் ஒருவரே எனக்கோடல் தவறாகாது. இரண்டாம் இராசராசனது 17ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில் காணப்பெறும் சேக்கிழான் மாதேவடிகள் ராமதேவனான உத்தம சோழப் பல்லவராயன் (36) என்பாவர் மேற்சொன்ன பாலறாவாயர்

தமையனாரும் பெரிய புராணம் பாடியவருமாகிய சேக்கிழாராக இருக்கலாம் எனக் கோடலும் தவறாகாது. என்னை? சேக்கிழார் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தவரே என்பது மேலே பல சான்றுகள் கொண்டு விளக்கப்பட்டதாலும் இப்படியற்படி இரண்டாம் குலோத்துங்கன் காலடத்திலும் அவன் மகனான இருண்டாம் இராசராசன் காலத்திலும் வெளிப்பட்ட கல்வெட்டுக்களில் சேக்கிழார் புராண ஆசிரியர் குறித்த சேக்கிழார் உத்தம சோழப் பல்லவராயர், சேக்கிழார் பாலறாவாயர் என்பவர் பெயர்களிலும் காணப்படலாலும் என்க.

சேக்கிழான் மாதேவடிகள்

மாதேவடிகள் என்பது சேக்கிழாரது பக்திச் சிறப்பு நோக்கி வந்த பெயராகலாம். இதற்கேற்பச் சேக்கிழார் புராண ஆசிரியர் அவரைக் குன்றைமுனி சேக்கிழார்(37) எனவும் அண்டவாணர் அடியார்கள் தம்முடன் அருந்தவந்தனில் இருந்தவர் (38) எனவும் கூறியிருத்தல் கருதற்பாலது. ஆதலின் சேக்கிழார்க்கு மாதேவடிகள் என்ற பெயர் அவர் பெரியபுராணம் பாடியபிறகு உண்டானதென்று கோடல் பொருந்தும்(39).

இராமதேவன்

இப்பெயர் சேக்கிழார் புராண ஆசிரியர் கூற்றாகும். இது சேக்கிழாரது இயற்பெயர் என்னலாம். சிறந்த சைவ மரபிலே பிறந்த சேக்கிழார்க்கு இராமதேவன் என்ற வைணவப் பெயர் அமையுமோ? எனில் அமையும் என்னலாம். 63 நாயன்மார்களுள் ஒருவரான முனையதரையர் நரசிங்கர் என்ற வைணவப் பெயரையும் ஒன்பதாம் திருமுறையில் இரண்டு பதிகங்கள் பாடியுள்ள சிவனடியார் ஒருவர் புருடோத்தம நம்பி என்ற வைணவப் பெயரையும் கொண்டிருந்தனர் என்பது அறியத்தக்கது. சிறந்த சிவபக்தனான முதற்குலோத்துங்கன் மனைவியருள் ஒருத்தி பெயர் நம்பிராட்டியார் சீராமன் அருள்மொழி நங்கை என்ற ஏழுலகம் உடையார் (40) என்பதையும் நோக்க பெரிய புராண ஆசிரியரும் சிறந்த சிவனடியாருமான சேக்கிழார் இராமதேவன் என்று பெயர் பெற்றிருத்தல் வியப்பில்லை. மேலும் இச்சேக்கிழார் மரபில் வந்த ஒருவன் குன்றத்தூர்ச் சேக்கிழான் வரந்தரு பெருமாள் என்கிற திருவூரகப் பெருமாள் (41) என்ற பெயர் கொண்டு மூன்றாம் இராசராசன் காலத்தில் இருந்தான் என்பதும் நோக்கத்தக்கது. திருவூரகப் பெருமாள் என்ற பெயர் குன்றத்தூரில் கோயில் கொண்டுள்ள விஷ்ணுவின் பெயராகும் (42). இத்துடன் குன்பத்தூர்ச் சேக்கிழார் மரபினருள் சிலர் இன்றும் வைணவர்களாக இருப்பது கருதத்தக்கது (43).

அருள்மொழித் தேவர்

இப்பெயர் சேக்கிழார் இயற்பெயர் என்று கொள்ளத்தக்க முறையில் சேக்கிழார் புராண ஆசிரியர் குறித்துள்ளார். இப்பெயர் சோர் காலத்தில் பெருவழக்குடையது. முதல் இராஜராஜ சோழனுக்கு இப்பெயர் இருந்த்து (44). அருள்முழி நங்கை என்று சோழமாதேவியர்க்குப் பெயர் இருந்தது. குடிமக்களும் இப்பெயர் பெற்றிருந்தனர்(48) என்பது பல கல்வெட்டுக்களைக் கொண்டு அறியலாம். ஆதலின் இப்பெயர் சேக்கிழாரது இயற்பெயராகக் கொள்ளலாம். இன்றேல் பெரிய புராண பாடற்சிறப்பு நோக்கி இவரை இங்ஙனம் அறிஞர் அழைப்பாராயினர் எனக்கோடல் பொருந்தும்.

No comments:

Post a Comment