Friday 4 October 2013

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி பணி

தமிழகத்தின் திருச்சியில் செயல்பட்டு வரும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் நடைபெறும் DST/UGC நிதி உதவியுடன் கூடிய ஆராய்ச்சி திட்டத்தின் கீழ் காலியாக உள்ள ஆராய்ச்சியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1. ஆராய்ச்சி திட்டத்தின் தலைப்பு: (DST Project): Studies on the rhodium carbenoids, towards the synthesis of spiro-het-erocycles, indole alkaloids and their asymmetric, reactions.
பணி: Junior Research Fellow
காலியிடம்: 01


கல்வித்தகுதி: Chemistry/Organic Chemistry பிரிவுகளில் முதல் வகுப்பில் எம்.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும். NET/Lectureship/GATE போன்ற தேர்வுகளில் தகுதி பெற்றிருப்பது விரும்பத்தக்கத் தகுதியாகும்.
சம்பளம்: DST விதிகளின் படி சம்பளம் மற்றும் HRA/MA வழங்கப்படும்.
திட்டக்காலம்: 13.11.2014
2. ஆராய்ச்சி திட்டத்தின் தலைப்பு (UGC Project): Studies on the Synthesis of macrocyclic Lactones and lactams ria ring closing metathesis reaction
பணி: Project Fellow
காலியிடம்: 01
கல்வித்தகுதி: Chemistry/Organic Chemistry பிரிவுகளில் முதல் வகுப்பில் எம்.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும். NET/Lectureship/GATE போன்ற தேர்வுகளில் தகுதி பெற்றிருப்பது விரும்பத்தக்கத் தகுதியாகும்.
சம்பளம்: UGC  விதிகளின் படி சம்பளம் மற்றும் HRA/MA வழங்கப்படும்.
திட்டக்காலம்: 17.07.2014 வரை.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வுசெய்யப்படும் பணியாளர்கள் முனைவர் பட்டப்படிப்பிற்கு பதிவு செய்ய அனுமதிக்கப்படுவர். பணிக்காலம் திட்ட முடிவு வரையிலாகும்.
பணிகள் அனைத்தும் தற்காலிகமானவை. நேர்முகத்தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கு பயணப்படி வழங்கப்பட மாட்டாது.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உடையவர்கள் தங்களுது முழு விவரங்கள் (மின்னஞ்சல் முகவரி உட்பட) அடங்கிய பயோடேட்டா. தற்போதைய புகைப்படம், மதிப்பெண் பட்டியல் சான்றுகள், பட்ட சான்றிதழ், வயது மற்றும் இதர கல்வித் தகுதிக்கான சான்றிதழ்கள் போன்றவற்றின் நகல்கள் இரண்டு References போன்றவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 11.10.2013
விண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரி: Prof.S.Muthusamy, Principal Investigator, School of Chemistry, Bharathidasan University, Trichy - 620024. Ph.No. 0431-2407053 ext. 544. e-mail: smuthus@yahoo.com

No comments:

Post a Comment