Friday 4 October 2013

ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரிசர்வ் வங்கி அச்சகத்தில் பணி

ரிசர்வ் வங்கியின் கீழ் செயல்பட்டு வரும் Bharatiya Reserve bank Note Mudran Private Limited நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Industrial Workman Grade-I (Trainee)
மொத்த காலியிடங்கள்: 300
வயதுவரம்பு: 01.09.2013 தேதிப்படி 28-க்குள் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி: 55 சதவிகித மதிப்பெண்களுடன் பிரிண்டிங், மெக்கானிக்கல், டூல் & டை, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமெண்டேசன், கெமிக்கல் உள்ளிட்ட ஏதாவதொரு பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.7,000 - 24,300 + கிரேடு சம்பளம் ரூ.2,880

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை offline அல்லது Online முறையிலும் செலுத்தலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைனில் மூலம் நடைபெறும் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைன் எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி: 23.11.2013 
எழுத்துத்தேர்வு நடைபெறும் இடங்கள்: அகமதாபாத், பெங்களூர், போபால், புவனேஷ்வர், சென்னை, குவஹாத்தி, ஹூப்ளி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, மைசூர், புதுதில்லி, பாட்னா, ராஞ்சி, ராய்ப்பூர், சிலிகுரி, திருவனந்தபுரம்
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.brbnmpl.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிரிண்ட் அவுட் நகலில் தேவையான இடங்களில் கையெப்பமிட்டு, தேவையான சான்றிதழ் நகல்களை அட்டெஸ்ட் பெற்று கைவசம் வைத்துக்கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.10.2013
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www

.brbnmpl.co.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment