Sunday 2 August 2015

நெடுஞ்சாலைத் துறையில் 213 உதவி பொறியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

தமிழக நெடுஞ்சாலைத் துறையில் காலியாக உள்ள 213 உதவி பொறியாளர் (சிவில்) பணியிடங்களை போட்டித்தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆகஸ்ட் 12 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் அளிக்கப்படும் 20 சதவீத இடஒதுக்கீடு இந்த நியமனத்தில் பின்பற்றப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதன்படி, தமிழ்வழியில் பொறியியல் படித்தவர்களுக்கு (சிவில்) ஏறத்தாழ 42 இடங்கள் ஒதுக்கப்படும்.
விளம்பர எண்.10/2015 தேதி: 21.07.2015
மொத்த காலியிடங்கள்: 213
பதவி: உதவி பொறியாளர்(சிவில்)
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.01.2015 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.175. இதனை ஆன்லைன் முறையிலும் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.08.2015
எழுத்துத் தேர்வு மையம்: சென்னை, கோவை, சிதம்பரம், மதுரை, சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி
எழுத்துத் தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டது. முதல் தாள் - சிவில் பொறியியல் சார்ந்தது. இதற்கான எழுத்துத் தேர்வு 06.09.2015 அன்று காலை 10 மணிக்கு நடைபெறும்.
இரண்டாம் தாள் - பொது அறிவு சம்மந்தமானது. இதற்கான தேர்வு 06.09.2015 அன்று மதியம் 2.30 மணிக்கு நடைபெறும்.
நெடுஞ்சாலை உதவி பொறியாளர்கள் நியமனத்துக்கான போட்டித் தேர்வில், தமிழ்வழியில் பொறியியல் படித்தவர்களுக்கு 20 சதவீத இடங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன. இதன்மூலம், தனியார் நிறுவனங்களால் கவனிக்கப் படாத தமிழ்வழி பொறியியல் பட்டதாரிகள் அரசுப் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
மேலும் விண்ணப்பத்தாரர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/10_2015_not_eng_engg_higways_civil.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment