Sunday 23 August 2015

ஓமன், குவைத்துக்கு மெஷின் ஆப்பரேட்டர்கள், கனரக வாகன ஓட்டுநர்கள் தேவை: அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவிப்பு

ஓமன், குவைத் நாடுகளில் பணிபுரிய மெஷின் ஆப்பரேட்டர்கள், கனரக வாகன ஓட்டுநர்கள், கேபிள் பொருத்துவதற்கான பள்ளம் தோண்டுதலில் பணி அனுபவம் உள்ளவர்கள் தேவைப்படுகின்றனர்.
 இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
 ஓமன் நாட்டிலுள்ள முன்னணி நிறுவனத்துக்கு 10-ஆம் வகுப்புத் தேர்ச்சியுடன் 2 ஆண்டு பணி அனுபவத்துடன் 22 முதல் 32 வயதுக்குள்பட்ட மெஷின் ஆப்பரேட்டர்கள் (இயந்திரம் இயக்குபவர்கள்) தேவைப்படுகிறார்கள்.
 குவைத் நாட்டில், இந்திய தொலைத்தொடர்பு திட்டப் பணிகளுக்காக எட்டாம் வகுப்புத் தேர்ச்சியுடன் 22 முதல் 35 வயதுக்குள்பட்ட கேபிள் பொருத்துவதற்கான பள்ளம் தோண்டுதலில் 2 ஆண்டுகள் அனுபவமுள்ள தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர்.
 மேலும், குவைத் ஓட்டுநர் உரிமம் வைத்துள்ள கனரக வாகன ஓட்டுநர்களும், இந்திய ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளவர்களும் தேவைப்படுகின்றனர். இந்திய கனரக ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளவர்கள், குவைத் கனரக ஓட்டுநர் உரிமம் பெறும் வரை தொழிலாளராகப் பணிபுரிய வேண்டும்.
 தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு தகுதி, அனுபவத்துக்கு ஏற்ப ஊதியம், இலவச விமான டிக்கெட், இருப்பிடம், அந்த நாட்டின் சட்டங்களுக்கு ஏற்ப இதர சலுகைகளும் வழங்கப்படும். இந்தப் பணியிடங்கள் தொடர்பான விவரங்கள், ஊதிய விவரங்களை www.omcmanpower.com என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
 விருப்பம் உள்ளவர்கள் தங்களது அசல் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்), சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், கடவுச்சீட்டு ஆகியவற்றின் 2 நகல்கள், நீலநிறப் பின்னணியில் எடுக்கப்பட்ட 5 புகைப்படங்களுடன் முதல் கட்டத் தேர்வுக்கு வர வேண்டும்.
 திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் (மன்னார்புரம்) ஆகஸ்ட் 30-ஆம் தேதி காலை 9 மணிக்கு முதல் கட்டத் தேர்வு நடைபெறும். மேலும் விவரங்களுக்கு 044-22502267, 22505886, 08220634389 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment