Wednesday 4 March 2015

மத்திய எலெக்ட்ரோ கெமிக்கல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி

அறிவியல் மற்றும் தொழிற்சாலை ஆராய்ச்சி கவுன்சிலின்கீழ் காரைக்குடியில் செயல்பட்டு வரும் மத்திய  எலக்ட்ரோ கெமிக்கல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 01/2015
பணிக்கோடு: AG
பணி: Assistant (General) Grade-II
காலியிடங்கள்: 03
வயதுவரம்பு: பொது பிரிவினருக்கு 28க்குள்ளும், 31க்குள்ளும் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900.
தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆங்கிலத் தட்டச்சில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது இந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணிக்கோடு: JS
பணி: Junior Stenographer
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
தகுதி: +2 தேர்ச்சியுடன் சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகளும், ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் அல்லது இந்தியில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகளும் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் கணினியில் தட்டச்சு தேர்வு, சுருக்கெழுத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை "The Director, CSIR-CECRI" என்ற பெயரில் காரைக்குடியில் மாற்றத்தக்க வகையில் குறுக்கு கோடிட்ட வங்கி வரைவோலையாக எடுத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.cecri.res.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.03.2015
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 20.03.2015
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Controller of Administration,
CSIR-Central Electro Chemical Research Institute,
Karaikudi-630006, Tamil Nadu.
மேலும் வயதுவரம்பு சலுகை, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.cecri.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment