Tuesday 1 September 2015

ஹைதராபாத் ஐஐடியில் பொறியாளர் பணி

ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் இந்தியன் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜியில் நிரப்பப்பட உள்ள நெட் ஒர்க் பொறியாளர், சிஸ்டம் பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Network Engineer
சம்பளம்: தொகுப்பூதியமாக மாதம் ரூ.14,000 - 30,000
தகுதி: பி.டெக், பி.இ, எம்சிஏ, ஐடி, இஇ, இசிஇ, சிஎஸ் அல்லது எம்.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், எம்எஸ் ஐடி போன்ற ஏதாவதொன்றில் 65 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: System Engineer
சம்பளம்: தொகுப்பூதியமாக மாதம் ரூ.14,000 - 30,000
தகுதி: பி.இ, பி.டெக், எம்சிஏ, சிஎஸ், ஐடி, இஇ, இசிஇ அல்லது எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.எஸ்சி கம்ப்யூட்டர், எம்எஸ்சி ஐடி போன்ற ஏதாவதொரு துறையில் 65 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்த்தி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் 09.09.2015 அன்று காலை 9.30 மணிக்கு நடைபெறும் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் நேரில் கலந்துகொள்ளலாம்.
நேர்முகத் தேர்வு குறித்து Indian Institute of Tecnology Hyderabad, ISAC-NOC, Ordnance Factory Estate Campus, Yeddumailaram, India - 502205 அல்லது help@isac.iith.ac.in என்ற முகவரியில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.iith.ac.in/recruitment/pdf%20files/ISAC-TechnicalStaff-Aug2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment