Thursday 17 April 2014

மத்திய அரசில் 875 மருத்துவர் பணி

மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஒருங்கிணைந்த மெடிக்கல் சர்வீசஸ் தேர்வு மூலம் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 875 மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
01. ரயில்வேயில் அசிஸ்டென்ட் டிவிஷனல் மெடிக்கல் ஆபீசர் - 650
02. மத்திய சுகாதார சேவையில் ஜூனியர் நிலை அதிகாரிகள் - 150
03. ஜெனரல் டியூட்டி மெடிக்கல் ஆபீசர் (கிழக்கு, வடக்கு, தெற்கு டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன்) - 53
04. புதுடெல்லி முனிசிபல் கவுன்சிலில் ஜெனரல் டியூட்டி மெடிக்கல் ஆபீசர் - 22
வயது வரம்பு: 01.01.2014 தேதியின்படி 32க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: மருத்துவத் துறையில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை ஏதேனும் ஒரு பாரத ஸ்டேட் வங்கியின் கிளைகளில் ரொக்கமாகவோ அல்லது விசா/ மாஸ்ட்ர் கிரெடிட்/ டெபிட் கார்டு மூலம் செலுத்தலாம்.
பெண்கள், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் எந்தவிதமான கட்டணமும் செலுத்த தேவையில்லை.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தமிழகத்தில் சென்னை, மதுரை ஆகிய இடங்களில் மட்டும் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 20.04.2014.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.04.2014.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 22.06.2014.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.upsconline.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment