Saturday 26 April 2014

ஐடிஐ முடித்தவர்களுக்கு மத்திய அரசு அச்சகத்தில் டெக்னீசியன் பணி

இந்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 'Security Printing and Minting Corporation of India' நிறுவனத்தின் கீழ் ஆந்திரா, ஐதராபாத்தில் 'India Government Mint' என்ற நிறுவனங்களில் காலியாக உள்ள 32 டெக்னீசியன் பணியிடங்களுக்கு ஐடிஐ முடித்தவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
01. Junior Technician (Die Medal Press Operator) - 02
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் டை ஹீட் டிரிட்மென்ட் பிரிவில் ஐடிஐ அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.
02. Junior Technician (Fitter) - 06
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பிட்டர் பிரிவில் ஐடிஐ. டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.
03. Junior Technician (Mill Wright) - 05
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மில்ரைட் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். டிப்ளமோ முடித்திருந்தால் விரும்பத்தக்கது.
வயது வரம்பு: 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.
04. Junior Technician (Plumber) - 01
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பிளம்பர் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். டிப்ளமோ முடித்திருந்தால் விரும்பத்தக்கது.
வயது வரம்பு: 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.
05. Junior Technician (Electrician) - 05
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரிக்கல் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். டிப்ளமோ முடித்திருந்தால் விரும்பத்தக்கது.
வயது வரம்பு: 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.
06. Junior Technician (Turner) - 01
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் டர்னர் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். டிப்ளமோ முடித்திருந்தால் விரும்பத்தக்கது.
வயதுவரம்பு: 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.
07. Junior Technician (Machinist) - 02
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மெஷினிஸ்ட் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். டிப்ளமோ முடித்திருந்தால் விரும்பத்தக்கது.
வயதுவரம்பு: 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.
08. Junior Technician (Carpenter)- 01
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கார்பென்டர் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். டிப்ளமோ மமுடித்திருந்தால் விரும்பத்தக்கது.
வயது வரம்பு: 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.
09. Junior Technician (Goldsmith)- 02
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் நகை தொழிற்சாலையில் தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் செய்வதில் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.
10. Junior Technician (Motor Mechanic /Fork Lift Driver) - 02
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் கார்/வேன் ஓட்டுவதில் 3 வருட பணி அனுபவம் மற்றும் மோட்டார் மெக்கானிசம் சம்மந்தமான அறிவையும் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.
11. Junior Technician (Fire Fighter)- 03
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தீயணைப்பு பயிற்சி நிலையத்தில் சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.
12. Dispensary Assistant - 01
கல்வித் தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் முதலுதவி மற்றும் காயங்களுக்கு கட்டுப் போடுதல் ஆகியவற்றில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.
13. இந்தி தட்டச்சர் - 01
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது +2 முடித்திருக்க வேண்டும். இந்தி தட்டச்சில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். இது தவிர கணினி அறிவும், ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: வரிசை எண் 01 முதல் 11 வரையிலான பணிகளுக்கு எழுத்துத்தேர்வு, டிரேடு தேர்வு, நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
வரிசை எண் 12 பணிக்கு எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு மூலமும், வரிசை எண் 13க்கு எழுத்துத்தேர்வு, இந்தி தட்டச்சு தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.100. இதனை 'The General Manager, India Government Mint' என்ற பெயரில் ஹைதராபாத்தில் மாற்றத்தக்க வகையில் டிடியாக எடுக்க வேண்டும். எஸ்சி., எஸ்டியினர், மாற்றுத்திறனாளிகள் எந்தவிதமான கட்டணமும் செலுத்த வேண்டாம்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் அல்லது அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். https://jobapply.in/igminthyderabad/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்கள் அதனை பிரிண்ட் அவுட்டை அஞ்சலில் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Post Box No.3076,
Lodhi Road,
NEWDELHI 110 003.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.04.2014.

No comments:

Post a Comment