Thursday 12 February 2015

தொழிலாளர் சேமநல நிதி அலுவலகத்தில் 34 பொறியாளர் பணி

புதுதில்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தொழிலாளர் சேமநல நிதி அலுவலகம் (எம்ப்ளாயீஸ் புராவிடண்ட் பண்ட் ஆபீஸ்) மற்றும் மண்டல அலுவலகங்களில் காலியாக உள்ள 34 இளநிலை பொறியாளர் (சிவில் மற்றும் எலக்ட்ரிக்கல்) பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: இளநிலை பொறியாளர் - 22
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
இந்த 22 இடங்களில் தமிழகத்திற்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பணி: இளநிலை பொறியாளர் (எலக்ட்ரிக்கல்)
காலியிடங்கள்: 12
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
இந்த 12 இடங்களில் தமிழகத்திற்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தகுதி: சிவில் அல்லது எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் மேலும் மத்திய, மாநில அரசுத் துறைகளில் மேற்கண்ட பணிகளுக்கு சமமான அந்தஸ்தில் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200 விகிதத்தில் குறைந்தபட்சம் 3 வருடங்கள் பணியாற்றியிருக்க வேண்டும்.

விண்ணப்பத்தை ஏற்கனவே பணியாற்றும் அலுவலகங்கள் மூலம் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Sh. Uday Baxi,
Regional Provident Fund Commissioner (HRM),
Bhavishya Nidhi Bhawan,
14, Bhikaiji Cama place,
NEWDELHI 110066.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 16.2.2015.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.epfindia.gov.in / www.epfindia.nic.in என்ற இணையதளங்களை பார்க்கவும்.

No comments:

Post a Comment