Tuesday 10 February 2015

முதுகலை பட்டதாரிகளுக்கு விமானப்படையில் வானிலை அதிகாரி பணி

இந்திய விமானப்படையின் வானிலை பிரிவில் நிரந்தர பணிப்பிரிவு மற்றும் குறுகிய கால பணிப் பிரிவுகளில் பணிபுரிய தகுதியும் விருப்பமும் உள்ள ஆண்கள் மற்றும்  பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி விவரங்கள்:
Meteorlogy Branch:
a) No. 198/16G/PC/M (ஆண்களுக்கானநிரந்தர பணிப்பிரிவு)
b) No.198/16G/SSC/M (ஆண்களுக்கான குறுகிய கால பணிப்பிரிவு)
c) No.198/ 16G/SSC/W (பெண்களுக்கான குறுகிய கால பணிப்பிரிவு)
வயது வரம்பு: 01.01.2016 தேதியின்படி 20 - 26க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு அறிவியல் பிரிவில் முதுகலை பட்டம், கணிதம்,புள்ளியியல், புவியியல், கம்ப்யூட்டர் அப்ளிகேசன்ஸ், சூழலியல் அறிவியல், பயன்பாட்டு இயற்பியல்,கடலியல், வானியல், வேளாண்மை வானியல், புவி இயற்பியல், சூழல் உயிரியல் ஆகிய பிரிவுகளில் ஏதாவதொன்றில் 50 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு எழுத இருப்பவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
உடற்தகுதி: உயரம்:  ஆண்களுக்கு - 157.5 செ.மீ., பெண்களுக்கு - 152 செ.மீ., உயரத்திற்கேற்ற எடையும் பெற்றிருக்க வேண்டும்.
Permanent Commission பிரிவின் கீழ் பணி ஓய்வு பெறும் வயது வரை பணியாற்றலாம். Short Service Commission பிரிவின் கீழ் சேருபவர்களுக்கு முதலில் 10 ஆண்டுகள் பணி வழங்கப்படும். அதன் பின்னர் பணிதிறனை பொறுத்து மேலும் 4 ஆண்டுகள் நீட்டிக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல், உளவியல் தேர்வு, குழுத்தேர்வு, நேர்முகத்தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: மாதிரி விண்ணப்பத்தைwww.careerairforce.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
POST BAG NO.001,
NIRMAN BHAWAN POST OFFICE,
NEWDELHI110106.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.02.2015.
மேலும் விண்ணப்பதாரர்களின் எழும் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய www.careerairforce.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment