Monday 16 June 2014

இந்திய கடற்படையில் artificer பயிற்சி

இந்திய கடற்படையில் நிரப்பப்பட உள்ள 137வது பிரிவுக்கான Sailors for Artificer Apprentice (AA) பயிற்சிக்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Sailors for Artificer Apprentice (AA) -137 Batch
வயது வரம்பு:. 01.02.1995 - 31.01.1998-க்கும் இரு தேதிகளும் உட்பட, இடைப்பட்ட காலங்களில் பிறந்திருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வேதியியல், உயிரியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் - கணிதம் & இயற்பியல் பாடங்களில் 55% மதிப்பெண்களுடன் எடுத்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ 5200-20200 + தர ஊதியம் ரூ. 2000 + ஒப்புதல். 2000 ரூ + 'எக்ஸ்' பிரிவு சம்பளம் ரூ.1400 + பிற சலுகைகள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.nausena-bharti.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ்கள் இணைத்து கீழ் வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
POST BOX NO. 476, GOL DAK KHANA,
GPO, NEW DELHI –110001
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.06.2014
ஆன்லைன் பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 27.06.2014
மேலும் விண்ணப்பதாரர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு www.nausena-bharti.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment