Thursday 12 June 2014

கெயில் நிறுவனத்தில் பொறியாளர் பணி

கெயில் நிறுவனங்களில் காலியாக உள்ள பொறியாளர் பணியிடங்கள் நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: பொறியாளர்
01. சீனியர் இன்ஜினியர் (கெமிக்கல்) - 15
கல்வித் தகுதி: கெமிக்கல், பெட்ரோ கெமிக்கல், கெமிக்கல் டெக்னாலஜி, பெட்ரோ கெமிக்கல் டெக்னாலஜி போன்ற துறைகளில் 65 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ முடித்திருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

02. சீனியர் இன்ஜினியர் (மெக்கானிக்கல்) - 05
கல்வித் தகுதி: மெக்கானிக்கல், புரடக்சன், புரடக்சன் மற்றும் இன்டஸ்ட்ரியல், மேனுபேக்சரிங், மெக்கானிக்கல் மற்றும் ஆட்மோமொபைல் போன்ற துறைகளில்
65 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ முடித்திருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

03. சீனியர் இன்ஜினியர் (எலக்ட்ரிக்கல்) - 05
கல்வித் தகுதி: எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் போன்ற துறைகளில் 65 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ முடித்திருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


04. சீனியர் இன்ஜினியர் (இன்ஸ்ட்ருமென்டேசன்) - 05
கல்வித் தகுதி: இன்ஸ்ட்ருமென்டேசன், இன்ஸ்ட்ருமென்டேசன் மற்றும் கன்ட்ரோல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேசன், எலக்ட்ரிக்கல் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேசன், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் போன்ற துறைகளில் 65 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ முடித்திருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 04.06.2014 தேதியின்படி 30-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.24,900 - 50,500.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை 'GAIL (India) Limited' என்ற பெயரில் புதுதில்லியில் மாற்றத்தக்க வகையில் டிடி அல்லது போஸ்டல் ஆர்டர் எடுத்து அனுப்ப வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: குழு விவாதம், நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.gailonline.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Senior Manager (HRD),
GAIL (India) Limited,
GAIL Bhawan,
16, Bhikaiji Cama Place,
R.K.PURAM,
NEWDELHI 110066.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.06.2014.
பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 19.06.2014.

No comments:

Post a Comment