Friday 20 June 2014

ஆயில் இந்தியா நிறுவனத்தில் அதிகாரி பணி

அசாம் மாநிலம், திப்ருகார் மாவட்டத்தில் டுலியஜானில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்திய ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 'கான்பிடன்ஷியல் செயலாளர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: கான்பிடன்ஷியல் செக்ரட்டரி
காலியிடங்கள்: 09
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500.
கல்வித் தகுதி: ஏதாவதொரு பட்டப்படிப்புடன் செக்ரட்டரியல் பிராக்டீஸ் அல்லது மாடர்ன் ஆபீஸ் அல்லது எக்சிக்யூக்டிவ் பாடத்தில் 2 ஆண்டு டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்: சம்பந்தப்பட்ட துறையில் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவு பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
வயது வரம்பு: 21.06.2014 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, கட்டணங்கள், தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.oilindia.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.06.2014.

No comments:

Post a Comment