Thursday 26 June 2014

BEL நிறுவனத்தில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளுக்கு பணி

பெங்களூரில் செயல்பட்டு வரும் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 31 பணியிடங்களை நிரப்ப பத்தாம் வகுப்புடன் தேர்ச்சியுடன் ராணுவ அல்லது துணை ராணுவப் படைகளில் பணியாற்றிய அதிகாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி ஜூனியர் சூப்பர்வைசர் (செக்யூரிட்டி)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.10,050 - 25,450 + இதர சலுகைகள்.
வயதுவரம்பு: 01.05.2014 தேதியின்படி 45க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி
அனுபவம்: ராணுவம் அல்லது கடற்படை அல்லது விமானப்படைகளில் போன்ற ஏதாவதொன்றில் ஜூனியர் கமிஷன்ட் அதிகாரியாக அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: ஹவில்தார் (செக்யூரிட்டி)
காலியிடங்கள்: 24
சம்பளம்: மாதம் ரூ.8,330 - 22,000 + இதர சலுகைகள்.
வயதுவரம்பு: 01.05.2014 தேதியின்படி 40க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி.
அனுபவம்: பாதுகாப்பு படையில் 15 வருடம் பணியாற்றிருக்க வேண்டும்.
பணி: ஜூனியர் லேடி சர்ச்சர்
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.7,960 - 21,020 + இதர சலுகைகள்.
வயதுவரம்பு: 01.05.2014 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி
அனுபவம்: பாதுகாப்பு படை, துணை ராணுவப்படை ஆகியவற்றில் குறைந்தது 3 வருடம் பணிபுரிந்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, உடல்திறன் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஒபிசி பிரிவினருக்கு ரூ.300. இதனை பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள செலானை பயன்படுத்தி ஏதாவதொரு பாரத ஸ்டேட் வங்கியின் கிளைகளில் சேவை கட்டணம் ரூ.25 சேர்த்து ரொக்கமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.bel-india.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களுடன் சாதாரண அஞ்சலில் அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Deputy Manager (HR/Central),
Bharat Electronics Limited,
Jalahalli Post,
BANGALORE 560013.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.06.2014.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.bel-india.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment