Tuesday 24 June 2014

ஐடிஐ, டிப்ளமோ தகுதிக்கு SAIL நிறுவனத்தில் பணி

Steel Authority of India Limited (SAIL) நிறுவனத்தின் IISCO ஸ்டீல் தொழிற்சாலையில் காலியாக உள்ள Operator-cum-Technician, Attendant-cum-Technician 473 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 473
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Operator-cum-Technician - 299
(i) Boiler Operation - 09
(ii) Trainee - 290
2. Attendant-cum-Technician - 174
(i) Boiler Operation - 05
(ii) Trainee - 169
வயது வரம்பு: OCT, ACT (Boiler Operation) பணிகளுக்கு விண்ணப்பிக்கும்  பொதுப் பிரிவினருக்கு 18  -30-க்குள்ளும், SC/ST பிரிவினருக்கு 18 - 35-க்குள்ளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 18 - 33-க்குள்ளும் இருக்க வேண்டும்.
ACT, OCT (Trainee)பணிகளுக்கு விண்ணப்பிக்கும் பொதுப்பிரிவினருக்கு 18  - 28-க்குள்ளும், SC/ST பிரிவினருக்கு 18 - 33-க்குள்ளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 18 - 31-க்குள்ளும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: Operator-cum-technician பணிக்கு மெட்ரிகுலேஷன் தேர்ச்சி பெற்று ஆட்டோமொபைல், செராமிக், வேதியியல், சிவில், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் அல்லது எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன், இன்ஸ்ட்ரூமென்டேஷன், மெக்கானிக்கல், உலோக/ உற்பத்தி போன்ற துறைகளில் இரண்டாம் வகுப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
Attendant-cum-Technician பணிக்கு மெட்ரிகுலேஷன் தேர்ச்சி பெற்று ஏர் கண்டிஷனிங் & குளிர்பதனம், வரையாளர்கள் (சிவில்), வரையாளர்கள் (Mech), எலக்ட்ரிசியன், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், பிட்டர்,மெஷினிஸ்ட், மெக்கானிக் மோட்டார் வாகனம், மெக்கானிக் டீசல், டர்னர், வெல்டர் பிரிவுகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: OCT (Boiler Operation, Trainee பணிக்கு பொதுப்பிரிவினர் ரூ. 250, ACT (Boiler Operation, Trainee பணிக்கு ரூ.150. SC/ST பிரிவினருக்கு ரூ. 50 மட்டும் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.sail.co.in அல்லது http://sailcareers.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: DGM (Pers-CF),
CEO’s Office Complex,
7 The Ridge, Burnpur-713325.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.07.2014
மேலும் விண்ணப்பதாரர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு www.sail.co.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment