Monday 9 June 2014

கெயில் நிறுவனத்தில் டிப்ளமோ தகுதிக்கு போர்மென் பணி

மத்திய பிரதேசம் மற்றும் உத்தரபிரதேசம் மாநிலங்களில் செயல்பட்டு வரும் கெயில் நிறுவனங்களில் காலியாக உள்ள போர்மேன் (குருப் சி) பணியிடங்கள் நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: போர்மேன் (குருப் சி)
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
01. போர்மென் (மெக்கானிக்கல்) - 09
கல்வித்தகுதி: மெக்கானிக்கல், புரொடக்சன், புரொடக்சன் மற்றும் இன்டஸ்ட்ரியல், உற்பத்தி, மெக்கானிக்கல் மற்றும் ஆட்டோமொபைல் போன்ற ஏதாவதொரு துறையில் 60 சதவிகித மதிப்பெண்கள் பெற்று டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். பெட்ரோ கெமிக்கல், உரம் அல்லது ஆயில் சுத்திகரிப்பு ஆலையில் 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

02. போர்மென் (எலக்ட்ரிக்கல்) - 07
கல்வித்தகுதி: எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறைகளில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். பெட்ரோ கெமிக்கல், உரம் அல்லது ஆயில் சுத்திகரிப்பு ஆலையில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
03. போர்மென் (இன்ஸ்ட்ருமென்டேசன்) - 07
கல்வித்தகுதி: இன்ஸ்ட்ருமென்டேசன், இன்ஸ்ட்ருமென்டேசன் மற்றும் கன்ட்ரோல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேசன், எலக்ட்ரிக்கல் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேசன், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறைகளில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். பெட்ரோ கெமிக்கல், உரம் அல்லது ஆயில் சுத்திகரிப்பு ஆலையில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

04. போர்மென் (கெமிக்கல்) - 32
கல்வித்தகுதி: கெமிக்கல், பெட்ரோ கெமிக்கல், கெமிக்கல் டெக்னாலஜி, பெட்ரோ கெமிக்கல் டெக்னாலஜி போன்ற துறைகளில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். பெட்ரோ கெமிக்கல், உரம் அல்லது ஆயில் சுத்திகரிப்பு ஆலையில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 04.06.2014 தேதியின்படி 32-க்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம்: மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் மாதம் ரூ.14,500 - 36,000 வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதை 'GAIL (India) imited' என்ற பெயரில் புதுதில்லியில் மாற்றத்தக்க வகையில் டிடி அல்லது போஸ்டல் ஆர்டர் எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்சி., எஸ்டியினர், மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வு செய்யப்படும் முறை: துறைவாரியான தேர்வு, நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 'www.gailonline.com' என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்..
ஆன்லைனில் விண்ணப்பித்த பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
THE DEPUTY MANAGER (HRD),
GAIL (India) Limited,
GAIL Bhawan,
16, Bhikaiji Cama Place,
R.K. Puram,
NEWDELHI 110066.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.06.2014.
பிரிண்ட்  அவுட் சென்று சேர கடைசி தேதி: 19.06.2014.

No comments:

Post a Comment