Friday 6 June 2014

+2 தகுதிக்கு இந்திய கடற்படையில் மாலுமி பணி

இந்திய கடற்படையில் மாலுமியாக சேர அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்க இருக்கும் கோர்சுக்கு +2 படித்த இந்திய ஆண்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சி: இந்திய கடற்படையில் மாலுமி
வயதுவரம்பு: 1994 பிப்.1-க்கும் 1998 ஜன.31-க்கும் இடைப்பட்ட காலங்களில் பிறந்திருக்க வேண்டும். (இரு தேதிகள் உள்பட)
கல்வித் தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரியல், வேதியியல் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றுடன் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களுடன் +2 முடித்திருக்க வேண்டும்.
உடற்தகுதி: குறைந்தபட்ச உயரம் 157 செ.மீ,  உயரத்திற்கு ஏற்ற எடையும் பெற்றிருக்க வேண்டும். மார்பளவு இருக்கும் நிலையிலிருந்து 5 செ.மீ, விரிவடையும் நிலையில் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, உடல்திறன் தேர்வு, மருத்துவப் பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 2015 பிப்ரவரியில் இருந்து 22 வாரங்களுக்கு கடற்படை மையமான சில்காவில் பயிற்சி அளிக்கப்படும்.
உதவித்தொகை: மாதம் ரூ.5700 பயிற்சியின் போது உதவித் தொகையாக வழங்கப்படும்.
பயிற்சிக்குப் பின் ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2000 சம்பளத்தில் மாலுமியாக பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் http://nausena-bharti.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்பத்தின் நகலை ரூ.10 ஸ்டாம்ப் ஒட்டியுள்ள சுய முகவரியிட்ட உறை மற்றும் தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Post Box No.488,
Gole Dak Khana, GPO,
NEW DELHI 110 001.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.06.2014.
பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 16.06.2014.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://nausena-bharti.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment