Monday 16 June 2014

முதுகலை பட்டதாரிகளுக்கு ராணுவ கல்வித்துறையில் பணி

இந்திய ராணுவ கல்வித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப முதுகலையில் பட்டம் பெற்ற இந்திய குடிமக்களிடம் (ஆண்கள்) இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Lieutenant (Army Education Corps (AEC))
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 23 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஆங்கிலம், பொருளாதாரம், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், தத்துவ இயல், உளவியல், சமூகவியல், பொது நிர்வாகம், சர்வதேச உறவுகள், சர்வதேச கல்வியல், இயற்பியல், வேதியியல், கணிதம், புள்ளியில், தாவரவியல், புவியியல், நானோ அறிவியல், எலக்ட்ரானிக்ஸ் போன்ற ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
காலியிடங்கள்:
M.A - பட்டதாரிகள் - 10
M.Sc - பட்டதாரிகள் - 06
M.A - (மொழிகள்) - பட்டதாரிகள் - 04
தேர்வு செய்யப்படும் முறை: சம்மந்தப்பட்ட துறையில் முதுகலையில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்முகத்தேர்வின்போது உளவியல் தேர்வு, குழு விவாதம் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் நகரங்கள்: அலகாபாத், போபால், பெங்களூர்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: செப்டம்பர், அக்டோபர் மாதம் - 2014
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பயிற்சியி்ன்போது மாதம் ரூ.21,000 உதவித்தொகை வழங்கப்படும்.
பயிற்சி: ஜனவரி 2015-ல் டெஹராடூனில் உள்ள இந்திய ராணுவ பயிற்சி மையத்தில் தொடங்கும். பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்கள் லெப்டினன்ட் தகுதிக்குரிய கல்வி பணியில் பணி அமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். அதன் பின் அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொண்டு நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படும்போது கெஜட்டெட் அதிகாரியிடம் கையெப்பம் பெற்று அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை எடுத்துக்கொண்டு கலந்துகொள்ள வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.06.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment