Monday 12 May 2014

ராணுவ மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் இலவச படிப்புடன் பணி

புனேயில் செயல்பட்டு வரும் ராணுவ மருத்துவ கல்லூரியில் (AFMC) MBBS படிப்பிற்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. MBBS படிப்பை முடித்தவர்கள் இந்திய மருத்துவராக பணி அமர்த்தப்படுவர்.
பணி: MBBS
கால அளவு: 41/2 வருடம் படிப்பு மற்றும் 1 வருட பயிற்சி
காலியிடம்: 130 இதில் 10 இடங்கள் SC/ST பிரிவினருக்கு ஒதுக்கப்படும்.
மொத்த காலியிடங்களில் ஆண்களுக்கு 105, பெண்களுக்கு 25.
கல்வித்தகுதி: இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் பாடங்கள் அடங்கிய +1 பாடப்பிரிவில் குறைந்தது 60 சதவிகித மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்கள் அடங்கிய பி.எஸ்சி பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: +2 தகுதி அடிப்படையில் விண்ணப்பிப்பவர்கள் 17 முதல் 22 வயதிற்குள்ளிருக்க வேண்டும். பி.எஸ்சி பட்டதாரிகள் 24 வயதிற்குள்ளிருக்க வேண்டும். அதாவது 01.01.1991-க்கு பிறகு பிறந்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் வயதுவரம்பானது 31.12.2014 தேதியின்படி நிர்ணயிக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் CBBE - ஆல் அகில இந்திய அளவில் நடத்தப்படும் AIPMT 2014 நுழைவுத் தேர்வின் அடிப்படையில் படிப்பிற்கு தேர்வு செய்யப்படுவர்.
AIPMT தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் www.afmc.nic.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளவும்.
AIPMT-2014 தேர்விற்கு முன்பதிவு செய்ய கடைசி நாள்: 13.05.2014
எழுத்துத் தேர்வில் முக்கிய பாடப்பிரிவுகள் மற்றும் English Language, Comprehension, Logic and Reasoning, Psychological Assessment போன்ற தகுதிகளை பரிசோதிக்கும் கேள்விகள் கேட்கப்படும். இதற்கு ஆன்லைன் முறையில் பதில் அளிக்க வேண்டும். இதில் வெற்றி பெறுபவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை எஸ்பிஐ கிளைகளில் பணமாக செலுத்தவும். பணம் செலுத்துவதற்கான செல்லானை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும். விண்ணப்பக் கட்டண செல்லானை 19.05.2014-க்கு முன்பாக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து 20.05.214-ஆம் தேதிக்கு முன்பாக கட்டணத்தை செலுத்தவும்.
விண்ணப்பிக்கும் முறை: www.afmc.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.05.2014
மேலும் விண்ணப்பதார்ரகளுக்கு எழும் சந்தேகங்களுக்கு www.afmc.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment