Thursday 8 May 2014

இந்திய கப்பல் படையில் இசை கலைஞர்களுக்கு பணி

இந்திய கப்பல் படையில் செய்லர் பிரிவில் இசைக் கலைஞர்களுக்கான பணியிடங்களை நிர்ப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்கழ் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு: 01.10.1993 -க்குப் பின்பும் 30.09.1997-க்கு முன்பும் பிறந்தவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் வெஸ்டர்ன் நொடேஷன்களை வாசிக்கும் திறன், ஆரல் ஆப்டியூடு, இசை குறித்த அடிப்படைகளை அறிந்திருத்தல் போன்ற திறன் பெற்றவராக இருக்க வேண்டும். வெஸ்டர்ன் கிளாசிகல் மியூசிக் மற்றும் விண்ட்/பெர்குசன் வாத்தியங்களில் செய்முறைப் பயிற்சியுடையவராகவும் இருக்க வேண்டும். அதாவது இசை தொடர்புடைய தேவை என்ன? தகுதி அடிப்படையில் இசைத் தகுதி தீர்மானிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை: இசைத்தகுதித் தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவப் பரிசோதனை தேர்வுகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பப் படிவத்தை முழுமையாக நிரப்பி பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கீழ்காணும் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
The Commanding Officer, (for Director of Music), INS Kunjali, Colaba, Mumbai-400 005.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.05.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, முழுமையான கல்வி விவரங்கள் போன்று விண்ணப்பதாரர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு http://www.nausena-bharti.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment