Friday 2 May 2014

விளையாட்டு வீரர்களுக்கு மத்திய அரசில் பணி

புனேவில் செயல்பட்டு வரும் மத்திய சுங்க வரித்துறை அலுவலகத்தில் காலியாக உள்ள வரி உதவியாளர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: வரி உதவியாளர்
காலியிடங்கள்: 19
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு மணி நேரத்தில் 800 வார்த்தைகளை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
பிற தகுதிகள்: அத்லட்டிக், பேட்மின்டன், ஃபுட்பால், கிரிக்கெட், பாஸ்கெட் பால், டேபிள்டென்னிஸ், பாடி பில்டிங் (ஆண்கள் மட்டும்), ஸ்விம்மிங் போன்ற விளையாட்டுகளில் ஏதேனும் ஒன்றில் சர்வதேச அளவிலோ, தேசிய அல்லது மாநில அளவிலோ பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.05.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான தகவல்கள் அறிய www.cbec.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment