Saturday 24 January 2015

செயில் நிறுவனத்தில் 558 டெக்னீசியன் பணி

மத்திய அரசின் நேரடிப் பார்வையில் செயல்பட்டு வரும் ஒரு பொதுத்துறை நிறுவனமான ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா எனப்படும் ‘செயில்’ நிறுவனத்தின் ‘பிலாய் ஸ்டீல் பிளான்ட்’ கிளையில் அட்டெண்டன்ட் கம் டெக்னீஷியன் (பயிற்சியாளர்), ஆபரேட்டர் கம் டெக்னீஷியன் (பயிற்சியாளர்) பொன்ற 558 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் கலியிடங்கள் விவரம்:
1. அட்டெண்டன்ட் கம் டெக்னீஷியன் (பயிற்சியாளர்) - 119
2. ஆபரேட்டர் கம் டெக்னீஷியன் (பயிற்சியாளர்) - 414
3. ஆபரேட்டர் கம் டெக்னீஷியன் (பாய்லர் ஆபரேஷன்) - 25
வயது வரம்பு: 01.12.2014 தேதியின்படி 18 - 28க்குள் இருக்க வேண்டும். பாய்லர் ஆபரேட்டர் பணிக்கு 30க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் ஐ.டி.ஐ முடித்திருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு தேர்ச்சிக்குப் பின் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் போன்ற துறைகளில் டிப்ளமோ முடித்தவர்கள் ‘ஆபரேட்டர் கம் டெக்னீஷியன்’ பணிக்கு விண்ணப்பிக்க தகுதியனவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கட்டணம்: அட்டெண்டன்ட் கம் டெக்னீஷியன் பணிக்கு விண்ணப்பிக்கும் பொது மற்றும் ஓபிசி. பிரிவினருக்கு ரூ.150. ஆபரேட்டர் கம் டெக்னீஷியன் பணிக்கு விண்ணப்பிக்கும் பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.sail.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.01.2015
மேலும் முழுமையன விவரங்கள் அறிய www.sail.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment