Saturday 3 January 2015

வருவாய் துறையில் அதிகாரி பணி

ஒடிசா மாநில அரசின் நீர்வள துறையின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் அரசு Revenue Inspector மற்றும் Amins பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஒடிசா அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 3803/OSSC
தேதி: 20.12.2014
மொத்த காலியிடங்கள்: 94
பணி: Revenue Inspector மற்றும் Amins
கல்வித்தகுதி: வருவாய் இன்ஸ்பெக்டர்: இளங்கலை பட்டம் அல்லது கணினி துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.01.2014 தேதியின்படி 21 - 32க்குள் இருக்க வேண்டும். அதாவது 02-01-1982 - 01-01-1993க்குள் பிறந்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்: 
வருவாய் ஆய்வாளர் பணிக்கு மாதம் ரூ. ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4200.
நிர்வாக பணிக்கு மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1800.

தேர்வுக் கட்டணம்:
SEBC மற்றும் இட ஒதுக்கீடு அல்லாத பிரிவினருக்கு ரூ.100. 
SC,ST,PH பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.odishassc.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Secretary, Odisha Staff Selection Commission, 
Barrack No-1, Unit-V, 
Bhubaneswar-751054

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி:  22.01.2015

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி:29.01.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://online.odishassc.in/download/3803_91.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment