Saturday 10 January 2015

இந்திய ரயில்வேயின் டீசல் என்ஜின் உற்பத்தி பிரிவில் ஆய்வக உதவியாளர் பணி

வாரணாசியில் செயல்பட்டு வரும் இந்திய ரயில்வேயின் டீசல் என்ஜி உற்பத்தி பிரிவின் மருத்துவமனையில் காலியாக உள்ள Lab Assistant பணியிடங்களை நேர்முகத் தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வருகின்ற 15 ஆம் தேதி நடைபெறுகின்ற நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விளம்பர எண்: 27/85E/Medi./Policy/01
பணி இடம்: அலகாபாத் (உத்தர பிரதேசம்)
பணியின் பெயர்: ஆய்வக உதவியாளர்
சம்பளம்: மாதம் ரூ.10,970
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் அறிவியல் மற்றும் டிப்ளமோ மெடிக்கல் லேப் டெக்னாலஜி (DMLT) அல்லது சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 - 33க்குள் இருக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 15.01.2015 காலை 10 மணிக்கு
இடம்:  Auditorium, Central Hospital, DLW.
நேர்முகத் தேர்விற்கு வருபவர்கள் அசல் சான்றிதழ்கள் மற்றும் அட்டெஸ்ட் பெறப்பட்ட நகல் சான்றிதழ்களை கொண்டு வரவேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.dlw.indianrailways.gov.in/view_detail.jsp?lang=0&dcd=441&id=0,297,310 என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment