Friday 2 January 2015

இந்திய அணு மின் கழகத்தில் செவிலியர், டெக்னீசியன் பணி

மகாராஷ்டிரா மாநிலம் தாராப்பூரில் செயல்பட்டு வரும் இந்திய அணு சக்தி கழகத்தில் காலியாக உள்ள துணை மருத்துவ பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: நர்ஸ் 'ஏ' (ஆண்)
காலியிடங்கள்: 06 (பொது - 3, ஒபிசி - 2, எஸ்சி - 1). இதில் ஓரிடம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800.
வயது வரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: +2 தேர்ச்சியுடன் நர்சிங் பிரிவில் டிப்ளமோ அல்லது பி.எஸ்சி., பட்டம் பெற்றிருக்க வேண்டும். செவிலியர் துறையில் 3 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: நர்ஸ் 'ஏ' (பெண்)
காலியிடங்கள்: 04 (எஸ்சி - 1, ஒபிசி - 1, பொது - 2). இதில் ஓரிடம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800.
வயது வரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: +2 தேர்ச்சியுடன் நர்சிங் பாடத்தில் டிப்ளமோ அல்லது பிஎஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும். செவிலியர் துறையில் 3 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: எக்ஸ்ரே டெக்னீசியன்
காலியிடங்கள்: 01 (மாற்றுத்திறனாளி)
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200.
வயது வரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: +2 தேர்ச்சியுடன் ஒரு வருட மெடிக்கல் ரேடியோகிராபி, எக்ஸ்ரே டெக்னீசியன் படிப்பை முடித்திருக்க வேண்டும். 60 சதவீத மதிப்பெண்களுடன் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரரின் வயது வரம்பு 01.7.2014 தேதிப்படி கணக்கிடப்படும். இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசுவிதிகளின்படி அதிகபட்ச வயது வரம்பில் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Manager (HR Recruitment),
Tarapur Maharashtra Site,
Tarapur Atomic Power Station,
14, PO:TAPP, Via Boisar (W.Rly),
Tal - Dist:Dalghar,
MAHARASHTRA. PIN: 401504.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:06.01.2015.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.npcil.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment