Thursday 16 October 2014

டிப்ளமோ, பிஇ தகுதிக்கு இந்திய ரயில்வேயில் 6,119 பணி

இந்திய ரயில்வேயின் அகமதாபாத், ஆஜ்மீர், அலகாபாத், போபால், புவனேஸ்வர், பிலாஸ்பூர், சண்டிகர், சென்னை, கொரக்பூர், கவுகாத்தி, கொல்கத்தா, மெய்டா, மும்பை, முசாபர்நகர், பாட்னா, ராஞ்சி, செகந்திராபாத், சிலிகுரி ஆகிய இடங்களை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மேற்கு ரயில்வே, வடமேற்கு ரயில்வே, வடமத்திய ரயில்வே, கிழக்கு ரயில்வே, தெற்கு மத்திய ரயில்வே, மத்திய ரயில்வே, வடக்கு, தெற்கு வடகிழக்கு, தென்கிழக்கு உள்ளிட்ட ரயில்வே மண்டலங்களில் காலியாக உள்ள 6,119 பணியிடங்களை நிரப்ப டிப்ளமோ மற்றும் பி.இ முடித்தவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 6119.
பணி: சீனியர் செக்ஷன் இன்ஜினியர்
காலியிடங்கள்: 1851
தகுதி: சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மேனுபேக்சரிங், இன்டஸ்ட்ரியல், மெஷினிங், இன்ஸ்ட்ருமென்டேசன் மற்றும் கன்ட்ரோல், டூல்ஸ் மற்றும் மெஷினிங், இன்ஸ்ட்ருமென்டேசன் மற்றும் கன்ட்ரோல், டூல்ஸ் மற்றும் டை மேகிங், ஆட்டோமொபைல், புராடக்சன் இன்ஜினியரிங்/ தகவல் தொழில்நுட்பம், கம்யூனிகேசன் இன்ஜினியரிங், பிரின்டிங் இன்ஜினியரிங் பிரின்டிங் தொழில்நுட்பம், மெட்டலார்ஜிக்கல், பவுண்டரி இன்ஜினியரிங் போன்ற துறையில் பி.இ. முடித்திருக்க வேண்டும்.
பணி: ஜூனியர் இன்ஜினியர்:
காலியிடங்கள்: 3980
தகுதி: சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மேனு பேக்சரிங், மெக்காடிரானிக்ஸ், இன்ட்ஸ்ட்ரியல், மெஷினிங், இன்ஸ்ட்ருமென்டேசன் மற்றும் கன்ட்ரோல், டூல்ஸ் மற்றும் மெஷினிங், டூல்ஸ் மற்றும் டை மேகிங், ஆட்டோமொபைல், புரடக்சன் இன்ஜினியரிங், ஆட்டோமொபைல், புராடக்சன், தகவல் தொழில்நுட்பம், கம்யூனிகேசன் ஆகிய பாடங்களில் மூன்று ஆண்டு டிப்ளமோ.
பணி: டிப்போட் மெட்டீரியல்ஸ் சூபரிண்டென்ட்:
காலியிடங்கள்: 105
தகுதி: ஏதேனும் ஒரு டிப்ளமோ.


பணி: கெமிக்கல் மெட்டாலர்ஜிக்கல் அசிஸ்டென்ட்:
காலியிடங்கள்: 183
தகுதி: மெட்டாலர்ஜி, கெமிக்கல் இன்ஜினியரிங் பாடங்களில் பி.இ., அல்லது வேதியியல், பயன்பாட்டு அறிவியலில் எம்.எஸ்சி. பட்டம்.
தேர்வுக் கட்டணம்: பொது மற்றும் ஒபிசி பிரவினருக்கு ரூ.100. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் தேர்வுக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை மற்றும் கூடுதல் தகவல் குறித்து அறிய www.rrb.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
சீனியர் பொறியாளர் பணிக்கு தேர்வு நடைபெறும் தேதி: 21.12.2014.
ஜூனியர் பொறியாளர் பணிக்கான தேர்வு நடைபெறும் தேதி: 14.12.2014.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.10.2014.
குறிப்பு: ஒன்றுக்கு மேற்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் தனித்தனி விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். சம்பந்தப்பட்ட ரயில்வே ரெக்ருட்மெனட் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment