Sunday 12 October 2014

டாக்டர் பாபா சாகிப் அம்பேத்கர் ஆராய்ச்சி மையத்தில் பேராசிரியர் பணி

புனேயில் செயல்பட்டு வரும் டாக்டர் பாபா சாகிப் அம்பேத்கர் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள 22 பேராசிரியர், இணைப் பேராசிரியர்கள், ரிசர்ச் அசோசியேட் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: பேராசிரியர் - 02
தகுதி: மனித இயல், சமூக அறிவியல், பொருளியல் போன்ற ஏதாவதொரு துறையில் பி.எச்டி முடித்திருக்க வேண்டும் மேலும் 55 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டத்துடன் 10 வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்றிருக்க வேண்டும்.
பணி: இணை பேராசிரியர் - 04
தகுதி: மனித இயல், சமூக அறிவியல், பொருளியல் போன்ற ஏதாவதொரு துறையில் பி.எச்டி முடித்திருக்க வேண்டும். மேலும் 55 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் முதுநிலை பட்டத்துடன் சம்பந்தப்பட்ட துறையில் 10 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலம் மற்றும் கணினியில் நல்ல புலமை பெற்றிருக்க வேண்டும்.
பணி: உதவி பேராசிரியர் - 04
தகுதி: மனித இயல், சமூக அறிவியல், பொருளியல் போன்ற ஏதாவதொரு துறையில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். நெட் அல்லது செட் தேர்வில் தேர்ச்சி அல்லது பி.எச்டி முடித்திருக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட துறையில் 3 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சிறந்த புலமை பெற்றிருக்க வேண்டும்.

பணி: ரிசர்ச் அசோசியேட் - 06
தகுதி: மனித இயல், சமூக அறிவியல், பொருளியல் போன்ற துறைகளில் இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று ஆராய்ச்சி பணியில் 5 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கணினி குறித்த அறிவு விரும்பத்தக்கது.


பணி: ரிசர்ச் அசிஸ்டென்ட் - 06
தகுதி: மனிதஇயல், சமூக அறிவியல், பொருளியல் போன்ற துறைகளில் இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலம் மற்றும் கணினியில் நல்ல புலமை பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.10.2014.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://barti.maharashtra.gov.in என்ற இணைய தளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment