Monday 6 October 2014

ஐடிஐ, டிப்ளமோ தகுதிக்கு ஸ்டீல் அதாரிடி ஆப் இந்தியாவில் பணி

இரும்பு உற்பத்தியில் உலகளவில் பிரசித்தி பெற்ற பொதுத்துறை சார்ந்த ஒரு மகாரத்னா நிறுவனமான ஸ்டீல் அதாரிடி ஆப் இந்தியா எனப்படும் செய்ல் நிறுவனத்தின்  துர்காபூர் உற்பத்தி மையத்தில் காலியாக உள்ள 258 ஆப்பரேட்டர் கம் டெக்னீசியன் மற்றும் அட்டென்டன்ட் கம் டெக்னீசியன் டிரெய்னி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரகவேற்கப்படுகின்றன.
பணி: ஆப்பரேட்டர் கம் டெக்னீசியன் மற்றும் அட்டென்டன்ட் கம் டெக்னீசியன் டிரெய்னி
காலியிடங்கள்: 258
வயது: 28க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: ஆப்பரேட்டர் கம் டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் மெக்கானிகல், எலக்ட்ரிகல், மெட்டலர்ஜி, சிவில், கெமிக்கல், எலக்ட்ரானிக்ஸ் போன்ற ஏதாவதொரு பிரிவில் +2 படிப்பிற்குப் பின்னர் 3 வருட டிப்ளமோ படிப்பாக முடித்திருக்க வேண்டும். அட்டென்டன்ட் கம் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் பத்தாம்
வகுப்பு தேர்ச்சியுடன் பிட்டர், எலக்ட்ரீசியன், வெல்டர் ஆகிய ஏதாவதொரு பிரிவில் ஐ.டி.ஐ முடித்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: ஆபரேட்டர் கம் டெக்னீசியன் பணிக்கு ரூ.250. அட்டென்டன்ட் கம் டிரெய்னி பணிக்கு ரூ.150. இதனை விண்ணப்பக் கட்டணமாக பாரத ஸ்டேட் வங்கியின் துர்காபூர் மையத்தின் Power Jyoti Current account No. 32336462661 என்ற அக்கவுண்ட் எண்ணில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.10.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://103.241.144.18/saildporeg/Document/AdvtPDF/Operator-Cum-Technician(Trainee).pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment