Sunday 16 November 2014

மத்திய அரசு சுகாதார திட்டத்தில் குரூப் "சி" பணி

மத்திய அரசு சுகாதார திட்டத்தின் கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் கிளையில் காலியாக உள்ள குரூப் சி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Accountant
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200
தகுதி: மத்திய அரசின் கணக்கீட்டு துறையினால் நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Staff Nurse
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600
வயதுவரம்பு: 21 - 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 10, +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஜெனரல் நர்சிங் பிரிவில் பட்டயப் படிப்பில் தேர்ச்சி பெற்று ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஆண் விண்ணப்பதாரர்கள் இந்திய நர்சிங் கவுன்சில் மூலம் அளிக்கப்படும் 6 மாத கால பயிற்சியினை முடித்திருக்க வேண்டும்.

பணி: Pharmacist (Allopathy)
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: அறிவியல் பாடங்களைக்கொண்ட பிரிவில் +2 தேர்ச்சி பெற்று பார்மசி பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.


பணி: ஆயுர்வேதிக் பார்மசிஸ்ட் (Ayurvedic Pharmacist)
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800
வயதுவரம்பு: 20 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: அறிவியல் பாடங்களைக் கொண்ட பிரிவில் +2 தேர்ச்சி பெற்று ஆயுர்வேசிக் பார்மசி பிரிவில் பட்டம், பட்டயப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் துறை சார்ந்த பிரிவில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: A.N.M (Auxilary Nurse Midwife)
சம்பளம்: ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சிபிஎஸ்இ பாட வழியில் +2 (Vocational Group) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்திய நர்சிங் கவுன்சிலில் A.N.M என பதிவு செய்திருக்க வேண்டும். குடும்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Lab Assistant
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2000
வயதுவரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: அறிவியல் பாடப் பிரிவில் +2 தேர்ச்சி பெற்று MLT பட்டயப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் சம்மந்தப்பட்ட துறையில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறைகள், வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.cghschennai.tn.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
OFFICE OF THE ADDITIONAL DIRECTOR, CENTRAL GOVERNMENT HEALTH SCHEME, II-C RAJAJI BHAVAN, BESANT NAGAR, CHENNAI-600090
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.11.2014

No comments:

Post a Comment