Saturday 8 November 2014

உதவி பேராசிரியர் பணிக்கு நெட் தேர்வு: சிபிஎஸ்இ அறிவிப்பு

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் மற்றும் ஆராய்ச்சி பணியில் சேருவதற்கு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பல்கலைக்கழக மானியக் குழு சார்பில் மத்திய இடைநிலை கல்வி வாரியம் (Central Board of Secondary Education) 'நெட்' தகுதித் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 'நெட்' தகுதி தேர்வை பல்கலைக்கழக மானியக்குழு சார்பாக சிபிஎஸ்இ முதல் முறையாக நடத்துகிறது.
'நெட்' தேர்வானது 2 பிரிவுகளை கொண்டதாகும். அதாவது Junior Research Fellowship மற்றும் Eligibility for Lectureship என்பதாகும். இதில் JRF ஐ தேர்ந்தெடுத்து நெட் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்வதற்கும், உதவி பேராசிரியர் பணியில் சேருவதற்கும் தகுதி பெறுவார்கள்.
கல்வித்தகுதி: யுஜிசியால் (பல்கலைக்கழக மானியக்குழு) குறிப்பிடப்பட்ட முதுகலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது அந்தப் படிப்பை படித்துக் கொண்டிருக்க வேண்டும். ஹியூமானிட்டீஸ், (மொழிகள் உட்பட) சமூக அறிவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் அப்ளிகேஷன்ஸ், எலக்ட்ரானிக் சயின்ஸ் உள்ளிட்ட 95 துறைகளில் முதுகலை பட்டப்படிப்பில் அல்லது அதற்கு இணையான படிப்பில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (எஸ்சி., எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பார்வைத்திறன் குறைபாடு உடையவர்களுக்கு 50 சதவிகித தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. சம்பந்தப்பட்ட துறையில் முனைவர் பட்டம் (பி.எச்டி) முடித்தவர்கள் விண்ணப்பிக்க தேவையில்லை. தேர்வு முடிவுக்காக காத்திருப்பவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு: ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப்பிற்கு விண்ணப்பிப்பவர்களுக்கு (Junior Research Fellowship) 28 வயதிற்குள்ளும். எஸ்சி, எஸ்டி, ஒபிசி மற்றும் மாற்றுத்திறனாளிகள், பார்வைத்திறன் குறைந்தவர்கள், பெண்கள் போன்ற பிரிவினருக்கு 5 வருடங்கள் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை.

விண்ணப்ப கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.450. பொருளாதாரத்தில் பின்தங்கிய ஒபிசியினருக்கு ரூ.225, எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.110. இதனை சிபிஎஸ்இ சார்பில் இணையதளத்தில் வெளியிடப்பட்ட பிரத்யேக செலானில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் ஏதாவதொரு கிளையில் செலான் படிவங்கள் மூலம் செலுத்தலாம். கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டை பயன்படுத்தியும் தேர்வு கட்டணத்தை செலுத்தலாம்.
தேர்வு மையங்கள்:
பாரதியார் பல்கலைக்கழகம், கோவை - 641046 (கோடு எண்: 09),
பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி - 620 024 (கோடு எண்: 10),
கேரளா பல்கலைக்கழகம், திருவனந்தபுரம்- 695034 (கோடு எண்: 32),
சென்னை பல்கலைக்கழகம், சென்னை - 600 005 (கோடு எண்: 36),
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மதுரை- 625021 (கோடு எண்: 37),
புதுச்சேரி பல்கலைக்கழகம், ஆர் வெங்கடராமன் நகர், கலாபேட், புதுச்சேரி- 605104 (கோடு எண்: 77) ஆகிய பல்கலைக்கழக மையங்களில் தேர்வுகள் நடைபெறும்.
விண்ணப்பதாரர்கள் எந்த தேர்வு மையத்தில் தேர்வு எழுத விருப்பமோ அந்தப் பல்கலைக்கழக பதிவாளர் பெயருக்கு பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் http://cbsenet.nic.in என்ற இணையதளத்தில் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.11.2014.
வங்கி மூலம் விண்ணப்ப கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 18.11.2014.
பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 25.11.2014.
தேர்வு நடைபெறும் தேதி: 28.12.2014.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://cbsenet.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்

No comments:

Post a Comment