Saturday 8 November 2014

புதுச்சேரி காவல்துறையில் 211 கான்ஸ்டெபில் பணி

புதுச்சேரி காவல்துறையில் காலியாக உள்ள 211 போலீஸ் கான்ஸ்டெபில் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: போலீஸ் கான்ஸ்டெபில் (IRBn)
காலியிடங்கள்: 211
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 22க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற் தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://115.115.142.130/pprec/index.aspx என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: The Superintendent of Police (HQ), No.2, Dumas Quarters, Puducherry.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.11.2014

No comments:

Post a Comment