Sunday 30 November 2014

இந்தியன் ஆயில் கழகத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு பணி

அரியானா மாநிலம், பரிதாபாத்தில் உள்ள இந்தியன் எண்ணெய் நிறுவன ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்தில் காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Research Officer (Chemistry)
காலியிடங்கள்: 06
சம்பளம்: மாதம் ரூ.24,900 - 50,500.
வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: வேதியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Research Officer (Bio technology)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.24,900 - 50,500.
வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: மைக்ரோ பயாலஜி, பயோ டெக்னாலஜி, பயோ கெமிஸ்ட்டிரி, பயோ சயின்சஸ், பயோ கெமிக்கல், பயோ புராசசஸ் போன்ற ஏதாவதொரு பொறியியல் துறையில்  முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Research Officer (Automotive Research)
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.24,900 - 50,500.
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையான மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், தெர்மல் இன்ஜினியரிங், ஐசி இன்ஜின்ஸ் போன்ற ஏதாவதொரு துறையில் எம்.இ முடித்திருக்க வேண்டும்.

பணி: Research Officer (Chemical Engineering)
காலியிடங்கள்: 07
சம்பளம்: மாதம் ரூ.24,900 - 50,500.
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: கெமிக்கல் துறையில் எம்.இ முடித்திருக்க வேண்டும்.

பணி: Senior Officer
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.24,900 - 50,500.
வயது வரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: மெக்கானிக்கல், ஆட்டோ மொபைல், தெர்மல் இன்ஜினியரிங், ஐசி இன்ஜின்ஸ் போன்ற ஏதாவதொரு துறையில் எம்.இ முடித்திருக்க வேண்டும்.

பணி: Deputy Manager (Research)/ Senior Research officer
காலியிடங்கள்: 01
தகுதி: மெக்கானிக்கல் துறையில் எம்.இ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 36க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: மெக்கானிக்கல் பொறியியல் துறையில் எம்.இ முடித்திருக்க வேண்டும்.

பணி: Chief Research Manager/ Senior Research Manager
காலியிடங்கள்: 01
சம்பளம்:
சீப் ரிசர்ச் மேனேஜர் பணிக்கு மாதம் ரூ.51,300 - 73,000.
சீனியர் ரிசர்ச் மேனேஜர் பணிக்கு மாதம் ரூ.43,200 - 66,000.
தகுதி: பரிசோதனை இயற்பியலில் அல்லது உடலியக்க வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Chief Research Manager/ Senior Research Manager
காலியிடங்கள்: 01
சம்பளம்: சீப் ரிசர்ச் மேனேஜர் பணிக்கு மாதம்ரூ.51,300 - 73,000.
சீனியர் ரிசர்ச் மேனேஜர் பணிக்கு மாதம் ரூ.43,200 - 66,000.
தகுதி: ஆர்கானிக் வேதியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரரின் வயது வரம்பு, கல்வித்தகுதி, பணி அனுபவம் ஆகியவை 30.09.2014 தேதியின்படி கணக்கிடப்படும். எஸ்சி., எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்களும், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்களும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 வருடங்களும் சலுகை வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் பி.இ., மற்றும் எம்.இ. படிப்புகளில் 65 சதவிகித மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்சி., எஸ்டி., மாற்றுத்திறனாளிகள் 55 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு மற்றும் மருத்துவ தகுதி சோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை 'Indian OIL Corporation Limited, R - D Centre, Faridabad' என்ற பெயருக்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கிளையில் (பரிதாபாத் கோட் எண்: 10449) டி.டி.யாக செலுத்தவும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.iocl.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்கள் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Indian OIL Corporation Ltd.,
R -D Centre, Post Box.No: 720,
Escorts Nagar Post Office,
Faridabad 121007.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.12.2014.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.iocl.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment