Thursday 20 November 2014

டிப்ளமோ தகுதிக்கு மத்திய அரசில் உதவியாளர் பணி

மத்திய அரசின் அறிவியல் துறை அமைச்சகத்தின் சயின்டிபிக் மற்றும் இன்டஸ்ட்ரியல் ரிசர்ச் கட்டுப்பாட்டின் கீழ் ஜார்கண்ட் மாநிலம் ரூர்கியில் செயல்பட்டு வரும் மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: டெக்னிக்கல் அசிஸ்டென்ட்: (எலக்ட்ரிக்கல்)
காலியிடங்கள்: 03
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவில் 3 வருட முழுநேர டிப்ளமோ அல்லது குறைந்தபட்சம் 2 வருட முழுநேர டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட துறையில் 2 வருட முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.

பணி: டெக்னிக்கல் அசிஸ்டென்ட்: (எலக்ட்ரானிக்ஸ்)
காலியிடங்கள்: 01
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் 3 வருட டிப்ளமோ அல்லது குறைந்த பட்சம் 2 வருட முழு நேர டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட துறையில் 2 வருட முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: கம்ப்யூட்டர் சயின்ஸ்
காலியிடங்கள்: 01
தகுதி: பொறியியல் துறையில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் 3 வருட டிப்ளமோ அல்லது 2 வருட முழு நேர டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட துறையில் 2 வருட முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: ஜியாலஜி
காலியிடங்கள்: 01
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு அறிவியல் பிரிவில் பிஎஸ்சி பட்டத்துடன் ஜியாலஜி பிரிவில் ஒரு வருட படிப்பு அல்லது ஒருவருடம் முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: இன்ஸ்ட்ருமென்டேசன்
காலியிடங்கள்: 02
தகுதி: இன்ஸ்ட்ருமென்டேசன் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் 3 வருட முழு நேர டிப்ளமோ அல்லது முழு நேர 2 வருட டிப்ளமோ முடித்து இரண்டு வருடம் முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: சிவில் இன்ஜினியரிங்
காலியிடங்கள்: 03
தகுதி: சிவில் பொறியியல் துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் மூன்று வருட டிப்ளமோ அல்லது முழு நேர 2 வருட டிப்ளமோ முடித்து சம்பந்தப்பட்ட துறையில் 2 வருட முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


பணி: வேதியியல்
காலியிடங்கள்: 05
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் வேதியியல் பிரிவில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட துறையில் ஒருவருட முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200.
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்களும், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு அவரவர் சார்ந்த பிரிவுகளின் அடிப்படையில் வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.100. இதனை Director, CBRI என்ற பெயரில் Roorkee-ல் செலுத்ததக்க வகையில் டி.டி.யாக செலுத்த வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Administrative Officer,
Central Building Research Institute,
Roorkee 247667,
UTTARKHAND.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.11.2014.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.cbri.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment