Saturday 22 November 2014

தில்லி அஞ்சல் துறையில் Postman, Mail Guard பணி

இந்திய அஞ்சல் துறையின் தில்லி, புதுதில்லி அஞ்சல் வட்டத்தில் நிரப்பப்பட உள்ள 740 Postman மற்றும் Mail Guard பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 740
துறைவாரியான காலியிடங்கள்:
I. Postman : 732
1. New Delhi South West Division - 104
2. New Delhi West Division - 107
3. Delhi East Division - 107
4. New Delhi Central Division - 83
5. Delhi North Division - 116
6. New Delhi South Division - 160
7. Delhi GPO - 30
8. New Delhi HO - 25
II. Mail Guard - 08
1. New Delhi Sorting Division - 01
2. Delhi Sorting Division - 04
3. Airmail Sorting Division - 03
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் மெட்ரிகுலேஷன், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 03.12.2014 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்: மாதம் ரூ.5200 -20200 + அவ்வப்போது பரிந்துரைக்கப்படும் படிகள்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து பிரிவினருக்கும் ரூ.100. இதனை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் செலுத்தலாம்.
தேர்வுக் கட்டணம்: ஆண் (பொது, ஓ.பி.சி., முன்னாள் படைவீரர் விண்ணப்பதாரர்): ரூ. 400
எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் தேர்வுக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை:  www.indiapost.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை எதிர்கால பயன்பாட்டிற்காக பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.12.2014
எழுத்துத் தேர்வுக்கான உத்தேச தேதி: 21.12.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://205.147.110.48/dop2014/Document/Advertisement.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment