Thursday 20 November 2014

சிறுதானியங்கள் உற்பத்தி ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

மாவட்டத்தில் சிறுதானியங்கள் உற்பத்தியை அதிகரிப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கும் மேலாண்மைக் குழுவுக்கு தாற்காலிக அடிப்படையில் ஆலோசகர் நியமிக்கப்பட இருப்பதால், தகுதியானவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
 இது குறித்து வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:
 திருப்பூர் மாவட்டத்தில் நடப்பாண்டில்(2014-15) வேளாண்மைத் துறையில் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம்(சிறுதானியங்கள் உற்பத்தி) செயல்படுத்தப்பட உள்ளது. சோளம், ராகி, மக்காச்சோளம் போன்ற தானிய பயிர்களில் உற்பத்தியை அதிகப்படுத்துவதன் மூலமாக விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் நோக்கதில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மாவட்ட அளவில் இத்திட்டத்தை ஒருங்கிணைத்து செயல்படுத்த திட்ட மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

 இக்குழுவுக்கு தாற்காலிக அடிப்படையில் ஒரு ஆலோசகர் நியமிக்கப்படவுள்ளார். வேளாண்மையில் அடிப்படை பட்டத்துடன் முதுகலை பட்டம் பெற்று பயிர் சாகுபடியில்
10 ஆண்டுகள் களப்பணியாற்றிய அனுபவம், ஊக்குவிப்புத் திறன், குழுத் தலைமைப் பண்புள்ளவரை தாற்காலி அடிப்படையில் ஆலோசகராக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தகுதியானவர்கள், தங்களது முழுவிவரங்களுடன் கூடிய விண்ணப்பத்தை வரும் 25 ஆம் தேதிக்குள் வேளாண்மை இணை இயக்குநருக்கு விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment