Saturday 13 December 2014

கப்பற்படையில் +2 தகுதிக்கு பி.டெக் பயிற்சியுடன் பணி

இந்திய கப்பற்படையில் இலவசமாக நான்கு வருட பி.டெக் பயிற்சி பெற்று பணியில் சேருவதற்கான 10+2 Cadet (B.Tech) Entry Scheme-ல் சேருவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள +2 முடித்த திருமணமாகாத ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆள்சேர்ப்பு திட்டத்தின் பெயர்: 10+2 Cadet (B.Tech)Entry Scheme
வயதுவரம்பு: 17 - 19.1/2க்குள் இருக்க வேண்டும். அதாவது 02.01.1996 - 01.07.1998க்கும் இடைப்பட்ட தேதிகளில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: 70 சதவிகித மதிப்பெண்களுடன் இயற்பியல், வேதியியல், கணித பாடப்பிரிவில் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கில பாடத்தில் குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: +2 பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள், தேர்வு 2015 பிப்ரவரி-மே மாதங்களின் இடைப்பட்ட காலங்களில் கோயம்புத்தூர், விசாகப்பட்டினம், பெங்களூர், போபால் ஆகிய இடங்கலில் நடைபெறும். தேர்வுகள் இரண்டு கட்டங்களாக மொத்தம் 3 முதல் 5 நாட்கள் வரை நடைபெறும்.
பயிற்சி: தேர்ந்தெடுக்கப்படுபவர்ளுக்கு கேரள மாநிலம் எழிமலாவிலுள்ள கப்பற்படை அகாடமியில் எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் அல்லது மெக்கானிக்கல் பொறியியல் துறையில் நான்கு வருட பயிற்சி பி.டெக் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் பி.டெக் பட்டம் வழ்கும்.
விண்ணப்பிக்கும் முறை: www.joinindiannavy,gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனி விண்ணப்ப பிரிண்ட் அவுட் மற்றும் சான்றிதழ் நகல்கள் சாராரண அஞ்சலில் சென்று சேர கடைசி தேதி: 04.01.2015
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Post Box No.4, Nirman Bhawan PO, New Delhi - 110011.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.12.2014
மேலும் விண்ணப்பதாரர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment