Saturday 6 December 2014

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் டிரெய்னி பணி

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் சார்பில் நிறுவனம் அகில இந்திய நிர்வாக சங்கம் வேளாண் பொருட்களுக்கு கிட்டங்கி வசதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பொதுத்துறை நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் மேனேஜ்மென்ட் டிரெய்னி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: மேனேஜ்மென்ட் டிரெய்னி (பொது)
காலியிடங்கள்: 08
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500. 
வயது வரம்பு: 09.12.2014 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் 60 சதவிகித மதிப்பெண்கள் தேர்ச்சியுடன் எம்பிஏ. பெர்சனல் மேனேஜ்மென்ட் அல்லது மனிதவளம் அல்லது தொழில் உறவுகள் அல்லது சந்தையியல் நிர்வாகம் அல்லது தொடர் அளிப்பு நிர்வாகம் போன்ற ஏதாவதொரு துறையை சிறப்பு பாடமாக எடுத்து படித்திருக்க வேண்டும்.
பணி: மேனேஜ்மென்ட் டிரெய்னி (அக்கவுன்ட்ஸ்)
காலியிடங்கள்: 19
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500.
வயது வரம்பு: 09.12.2014 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று நிதி துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் எம்பிஏ அல்லது சிஏ அல்லது ஐசிடபிள்யூஏ அல்லது ஏசிஎஸ் முடித்திருக்க வேண்டும்.
பணி: மேனேஜ்மென்ட் டிரெய்னி (டெக்னிக்கல்)
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500.
வயது வரம்பு: 09.12.2014 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பூச்சியியல் அல்லது நுண்ணுயிரியல் அல்லது உயிரி வேதியியல் ஆகிய ஏதாவதொரு துறையுடன் வேளாண்மை பாடத்தில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் அல்லது பூச்சியியல் அல்லது விலங்கியல் பாடங்களில் ஏதாவதொரு துறையுடன் உயிரி வேதியியல் பாடத்தில் 60 சதவிகித தேர்ச்சியுடன் முதுகலை பட்டம். கிட்டங்கி மற்றும் சங்கிலித் தொடர் வணிகத்தை ஒரு பாடமாக படித்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
பணி: அக்கவுன்டென்ட்
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500. + இதர சலுகைகள்.
தகுதி: பி.ஏ அல்லது பி.காம்., சிஏ., அல்லது வணிகவியலில் பி.ஏ., அல்லது சிஏ அல்லது ஐசிடபிள்யூஏ அல்லது ஏசிஎஸ் மற்றும் தணிக்கை துறையில் 3 வருட  அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட்
காலியிடங்கள்: 112
தகுதி: உயிரி வேதியியல் அல்லது வேதியியல் ஆகிய துறைகளில் ஏதாவதொரு துறையில் வேளாண்மை அல்லது விலங்கியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அனைத்து பணிகளுக்கும் கணினி அறிவு பெற்றிருப்பது விரும்பத்தக்கது..
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை பொது மற்றும் ஒபிசியினர் All India Management Association என்ற பெயரில் புதுதில்லியில் செலுத்தத்தக்க வகையில் டி.டி.யாக செலுத்த வேண்டும். டி.டி.யின் பின்னால் பெயர், விண்ணப்ப எண் ஆகியவற்றை குறிப்பிடவும்.
விண்ணப்பிக்கும் முறை: www.jobapply.in/mrpsujob2014 என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய முகவரி:
Post Box.No: 3076,
Lodhi Road
NEWDELHI 110 003.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.12.2014.
பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 13.12.2014.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.jobapply.in/mrpsujob2014 என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment