Saturday 13 December 2014

பட்டதாரிகளுக்கு உதவி புவியியலாளர் பணி

தமிழக அரசின் தொழில் சார்நிலைப் பணியில் உதவி புவியியலாளர் (ஜியாலஜிஸ்ட்) காலியிடத்தை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: உதவி புவியியலாளர் (ஜியாலஜிஸ்ட்)

தகுதி: ஜியாலஜி படிப்பில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpscexams.net என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.12.2014

ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி: 01.02.2015


மேலும் வயது வரம்பு, பாடத் திட்டம், தேர்வுமுறை, தேர்வு மையம் உள்ளிட்ட விவரங்களை அறிய wwww.tnpsc.gov.in, www.tnpscexams.net என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment