Monday 22 December 2014

தேசிய கட்டுமான கழகத்தில் இளநிலை பொறியாளர் பணி

புதுதில்லியில் செயல்பட்டுவரும் தேசிய கட்டுமான கழகத்தில் (National Building Construction Corporation Limited) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 09/2014
பணி: Sr.Project Executive (Elect)
சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500
வயதுவரம்பு: 23.12.2014 தேதியின்படி 29க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Electrical Engineering பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். மேலும் Design Eng, Elecion & Commissioning of HT/CT Switchears, Transformers, Motor PLC based Panels, Lighting, Automatic Power Factor Correcion, Cable Eng, Electrical System Engineering பிரிவில் 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Junior Engineer (Electrical)
சம்பளம்: மாதம் ரூ.9,760
வயதுவரம்பு: 23.12.2014 தேதியின்படி 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Electrical Engineering பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளமோ அல்லது அதற்கு இணையான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.nbccindia.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரியை A4 வெள்ளைத்தாளில் தயார் செய்து தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் அட்டெஸ்ட் பெற்று இணைத்து அனுப்ப வேண்டும். நேர்முகத் தேர்விற்கு வரும்போது அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டு வரவேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
ED(HRM),
NBCC Limited, NBCC Bhawan, Lodhi Road, New Delhi - 110003.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 23.12.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nbccindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment