Monday 29 December 2014

குவைத் நாட்டில் வேலைவாய்ப்பு: இந்திய அரசு அழைப்பு

குவைத் நாட்டில் உள்ள இந்திய தொலைதொடர்புத்துறையில் பணியாற்ற அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னையிலுள்ள அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குநர் குவைத் நாட்டிலுள்ள இந்திய தொலைத்தொடர்புத்துறையில் பணிபுரிய ஆட்கள் தேவைப்படுவது தொடர்பாக அறிவிக்கை வெளியிட்டுள்ளார். அதன்படி, டிப்ளமோ தேர்ச்சியுடன் 3 ஆண்டு அனுபவம் பெற்ற சிவில் இன்ஜினியர்கள், 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் 5 ஆண்டு பணி அனுபவமுள்ள கொத்தனார்கள் மற்றும் சமையலர்கள், 5 ஆண்டு அனுபவத்துடன் துவக்கப்பள்ளி தேர்ச்சி பெற்ற தொழிலாளர்கள்,  8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்ற ரிகர்கள் மற்றும் தொழிலாளர்கள், 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 2 ஆண்டு பணி அனுபவத்துடன் 50 வயதிற்குட்பட்ட குவைத் ஓட்டுநர் உரிமம் வைத்துள்ள இலகுரக மற்றும் கனகரக வாகன ஓட்டுனர்கள் மற்றும் டிப்ளமோ தேர்ச்சியுடன் சிவில் பிரிவில் 5 ஆண்டு அனுபவம் பெற்ற ஆட்டோகாட் இயக்குபவர்கள் தேவைப்படுகிறார்கள்.
தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு தகுதி மற்றும் அனுபவத்திற்கேற்ப ஊதியத்துடன், இலவச விமான டிக்கெட், இருப்பிடம் மற்றும் குவைத் நாட்டின் சட்டத்திற்குட்பட்ட இதர சலுகைகள் வழங்கப்படும். மேற்காணும் பணிக்கு விருப்பமும் தகுதியும் இருப்பின் தங்களின் சுய விபரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் புகைப்படத்துடன் ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலகம், எண்.42,  ஆலந்தூர் சாலை, திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை-32 என்ற முகவரியிலுள்ள தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு நேரிலோ அல்லது ஜ்ஜ்ஜ்.ர்ம்ஸ்ரீழ்ங்ள்ன்ம்000ஞ்ம்ஹண்ப்.ஸ்ரீர்ம் என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உடனடியாக விண்ணப்பிக்கலாம்.
மேலும் விபரங்களுக்கு 94446 96724, 044-22502267, 22505886 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவும் அல்லது ஜ்ஜ்ஜ்.ர்ம்ஸ்ரீம்ஹய்ல்ர்ஜ்ங்ழ்.ஸ்ரீர்ம் என்ற இணையதளத்திலும் தெரிந்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment