Thursday 25 December 2014

முதுகலை பட்டதாரிகளுக்கு ராணுவ கல்வித் துறையில் பணி

இந்திய ராணுவ கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப முதுகலை பட்டதாரிகளிடமிருந்து (ஆண்கள்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Lieutenant (Army Education Corps (AEC))
வயதுவரம்பு: 23 - 27க்குள் இருக்க வேண்டும். 02.07.1988 - 01.07.1992க்கு இடைப்பட்ட காலங்களில் பிறந்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
தகுதி: ஆங்கிலம், பொருளாதாரம், வரலாறு, புவியியல, அரசியல் அறிவியல், தத்துவ இயல், உளவியல், சமூகவியல், பொது நிர்வாகம், சர்வதேச உறவுகள், சர்வதேச கல்வியல், புள்ளியியல் போன்ற துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது இயற்பியல், வேதியியல், கணிதம், தாவரவியல், ஜியாலஜி, நானோ அறிவியல், எலக்ட்ரானிக்ஸ் துறையில் எம்.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது எம்சிஏ, எம்.காம், எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.
அல்லது Chinese/ Tibetan/Burmese/Pushto/Dari & Arabic மொழிகளில் ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: சம்மந்தப்பட்ட துறையில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்களுக்கு நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்வின்போது உளவியல் தேர்வு, குழு விவாதம் ஆகியவை நடத்தப்படும்
நேர்முகத் தேர்வுகள் நடைபெறும் மையங்கள்: அலகாபாத், போபால், பெங்களூர்.
நேர்முகத்தேர்வு 2015 மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை இரண்டு பிரிண்ட் அவுட் எடுத்து அதில் ஒன்றில் தேவையான இடத்தில் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி கெஜட்டெட் அதிகாரியிடம் கையெப்பம் பெற்று அனைத்து சான்றிதழ் நகல்களையும் இணைத்து கொண்டு வர வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.12.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment